Last Updated : 31 Dec, 2021 07:54 PM

 

Published : 31 Dec 2021 07:54 PM
Last Updated : 31 Dec 2021 07:54 PM

காய்ச்சல், தொண்டை வலியுடன் வந்தால் கரோனா பரிசோதனை செய்யுங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பொதுமக்கள் காய்ச்சல், தொண்டை வலியுடன் வந்தால் கரோனா பரிசோதனை செய்யுமாறு மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷனும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) தலைவர் மருத்துவர் பல்ராம் பார்கவாவும் கூட்டாக மாநில தலைமைச் செயலர்களுக்கு ஒமைக்ரான் பரிசோதனை குறித்து கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில் பல்வேறு பரிந்துரைகளை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

அவற்றின் விவரம் வருமாறு:

கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, கரோனா தொற்று எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் போது ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள் முடிவுகளை அறிய தாமதம் ஏற்படும். 5 முதல் 8 மணி நேரம் வரை முடிவுகள் வர தாமதமாகும் என்பதால் ஐசிஎம்ஆர் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ரேபிட் ஆன்ட்டிஜென் டெஸ்ட் (RATs) மேற்கொள்ள அனுமதியளிக்கிறது.

இதற்காக பொது இடங்களில் ரேபிட் ஆன்ட்டிஜென் டெஸ்ட் (RATs) பூத்களை அமைத்து மக்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என மாநிலங்கள், யூனியர் பிரதேசங்களுக்குப் பரிந்துரைக்கிறோம். ஆனால், அங்கு தேர்ந்த மருத்துவக் குழு இருக்க வேண்டும்.
அத்துடன் வீடுகளில் செல்ஃப் டெஸ்ட் கிட்களை சுய பரிசோதனை உபகரணங்களைப் பயன்படுத்தவும் ஊக்குவிக்கலாம். ஆனால், அறிகுறி கொண்டவர்கள் தான் இத்தகைய பரிசோதனையை செய்து கொள்ள முடியும். கோவிட் சுய பரிசோதனைக்காக 7 வகையான உபகரணங்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்து மக்களை ஊக்குவிக்கலாம். அவற்றிற்கான தெளிவான வழிகாட்டுதல்களைக் கூற வேண்டும்.

ரேபிட் ஆன்ட்டிஜென் டெஸ்ட் (RATs) அல்லது ஆர்டி பிசிஆர் என்னவிதமான பரிசோதனை செய்தாலும் கூட அதன் முடிவுகளை ஐசிஎம்ஆர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

எந்த ஒரு தனிநபரும் காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, இருமல் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம், மூச்சுத்திணறல், உடல்வலி, சுவை, முகர்தல் திறன் இல்லாமல் போதல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளுடன் வந்தாலும் அவர்களை கோவிட் 19 பாதித்தவர்களாக பாவித்து பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அத்தகையோரின் சோதனை முடிவு வரும் வரை அவர்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்த வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x