Last Updated : 06 Mar, 2016 10:44 AM

 

Published : 06 Mar 2016 10:44 AM
Last Updated : 06 Mar 2016 10:44 AM

பெண்களுக்கு எதிரான எண்ணம் எப்போது மாறும்?

மார்ச் 8… மகளிர் தினம். இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில், அதிக தாக்குதல்களுக்கு உள்ளாவதும், பாரபட்சம் காட்டுவதும் பெண்களிடம்தான். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார், சிறையில் இருந்து வெளியில் வந்ததும் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, ஜேஎன்யூ.வில் ஆர்ப் பாட்டம் செய்பவர்கள் தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள், சிறு பான்மையினர் என்று அவர் பட்டியலிட்டுள்ளார்.

மாணவர்களின் விடுதலை கோஷத்தில், ஆண் - பெண் பாரபட்சம் உள்ள சமத்துவமற்ற இந்த சமுதாயத்தில் இருந்து விடுதலை வேண்டும் என்பதும் அடங்கும். இது வழக்கத்துக்கு மாறான முழக்கம். இதை நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை என்பது இந்தியாவுக்கு புதிதல்ல. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் வேறு பல சிக்கல்களையும் எதிர்த்து போராட வேண்டி உள்ளது. வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களை பற்றி தினந்தோறும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்த பின்னரும் அவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.

தந்தையால் சீரழிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு (மகாராஷ்டி ராவில்) பிரம்படி தண்டனையை ‘ஜாதி பஞ்சாயத்து’ வழங்கியுள்ள செய்தி வெளிவந்துள்ளது. இதுபோல் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய ஏராளமான செய்திகள் உள்ளன.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையில் கொள்கை முடிவுகள் எடுப்பதற்காக, தேசிய குடும்பநல சுகாதார புள்ளிவிவ ரத்தை மத்திய அரசு எடுத்துள்ளது. அதில் தாய் - சேய் நலம், குடும்பத்தில் நடக்கும் வன்முறைகள், பாலியல் கொடுமைகள் போன்றவை குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுபோல் இந்தியாவில் புள்ளிவிவரம் எடுப்பது மிகவும் சிக்கலான விஷயம். ஏனெனில், கணவன் வலுக்கட்டாயமாக உறவு கொள்வது (திருமண பலாத்காரம்) இங்கு குற்றம் இல்லை. எனவே இதுபோன்ற குற்றங்கள் கணக்கில் சேருவதில்லை.

நாடு முழுவதும் 15 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட 83,703 பெண்களிடம் மத்திய அரசு எடுத்த புள்ளிவிவரம் வருமாறு:

# பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் நூறு பெண்களில் ஒருவர்தான் போலீஸில் புகார் அளிக்கிறார்.

# உறவுக்கு மறுக்கும் மனைவி யிடம் 5.7 சதவீத ஆண்கள் பலத்தை பயன்படுத்தி வலுக்கட்டாயமாக உறவு கொள்கின்றனர். 19.8 சதவீத ஆண்கள் உறவுக்கு மறுக்கும் மனைவியை அடித்து உதைக்கின் றனர். 6 சதவீத ஆண்கள் வீட்டுச் செலவுக்கான பணத்தை வழங்கா மல் நிறுத்திக் கொள்கின்றனர். 4.2 சதவீத ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைத்துக் கொள்கின்றனர்.

# படிக்காத பெண்களில் 44 சதவீதம் பேர் 15 வயது முதலே வன்முறைகளால் பாதிக்கப்படுகின் றனர். அதேசமயம் படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித் திருப்பதால் இந்த நிலை சற்றே குறைந்துள்ளது.

# வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களில் மூன்றில் 2 பேர் மற்றவர்களிடம் உதவி கேட்ப தில்லை.

# பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெரும்பாலான பெண்கள் (85 சதவீதம்) அதனை யாரிடமும் சொல்வதில்லை. 8 சதவீத பெண்கள் மட்டுமே பாதிக் கப்பட்டதை தெரிவித்து பிறரிடம் உதவி கேட்கின்றனர்.

# இதற்கு முரணாக மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படும் பெண்களில் 37 சதவீதம் பேரும், உடல்ரீதியாக மட்டும் பாதிக்கப்படும் பெண்களில் 22 சதவீதம் பேரும் உதவி கேட்கின்றனர். இதில் முன்னாள் கணவர்கள் மூலம் பாதிக்கப்படும் பெண்கள் துணிந்து உதவி கேட்கின்றனர்.

# படித்த அல்லது வசதி உள்ள பெண்கள் பெரும்பாலும் தாங்கள் பாதிக்கப்படும் போது உதவி கேட்பது குறைவுதான். அந்த வகையில் படிக்காத, வசதி இல்லாத பெண்கள் துணிச்சலாக புகார் கொடுக்கவோ அல்லது உதவி கேட்கவோ முன்வருகின்றனர்.

# பாதிக்கப்படும் பெண்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடமே உதவியை எதிர்பார்க்கின்றனர்.

# உடல் ரீதியாக பாதிக்கப்படும் 72 சதவீத பெண்கள், பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் 58 சதவீதம் பெண்கள், தங்கள் குடும்பத்தினரால்தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

# பாதிக்கப்படும் பெண்களில் சிலர்தான் போலீஸ், மருத்துவர் அல்லது சமூக சேவை அமைப்பு களின் உதவிகளை நாடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x