Published : 22 Dec 2021 06:07 PM
Last Updated : 22 Dec 2021 06:07 PM

சம்பளம் வேண்டுமா?- தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்கவும்: பஞ்சாப் அரசு ஊழியர்களுக்கு நிபந்தனை

சம்பளம் வேண்டுமா தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு பஞ்சாப் மாநிலம் நிபந்தனை விதித்துள்ளது.

இது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு இன்றோர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், அரசு ஊழியர்கள் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும். இது தொடர்பான சான்றிதழ்களை பஞ்சாப் அரசாங்கத்தின் இணையதளத்தில் அரசு ஊழியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றினால் தான் சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் தடுப்பூசி சான்றிதழை, பஞ்சாப் அரசாங்கத்தின் iHRMS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த இணையதளம் அரசு ஊழியர்கள் சம்பள விநியோகம் மற்றும் அவர்களின் ஓய்வு காலப் பணிக்கொடைகள் தொடர்பான சிக்கலகளைக் களைய உருவாக்கப்பட்டதாகும். இதன்படி இந்த இணையதளத்தில் கரோனா தடுப்பூசி சான்றிதழைப் பதிவேற்றம் செய்வோருக்கு மட்டுமே சம்பளம் சென்று சேரும்.

ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் பரவிவரும் சூழலில் பஞ்சாப் மாநில அரசின் இந்த கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அண்டை மாநிலமான ஹரியாணாவில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பின்னர் உணவகங்கள், வங்கி, வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், பேருந்து போன்ற இடங்களிலும் நுழைய தடை விதிக்கப்படுவதாக அம்மாநில சுகாதார அமைச்சர் அணில் விஜ் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தலைநகர் டெல்லியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், கலாச்சார நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x