Last Updated : 19 Mar, 2016 08:51 AM

 

Published : 19 Mar 2016 08:51 AM
Last Updated : 19 Mar 2016 08:51 AM

இந்து கோயில் அழைப்பிதழில் முஸ்லிம் கலெக்டர் பெயர் நீக்கம்: கர்நாடகாவில் சர்ச்சை

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ளது புத்தூர் மஹாலிங்கேஸ்வரா கோயில். கி.பி. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 17-ம் தேதி தேர்த் திருவிழா நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

இந்த ஆண்டு நடைபெறும் தேர்த் திருவிழாவுக்கு கோயில் நிர்வாகம் அழைப்பிதழ் அச்சிட்டது.

அதில் த‌க்ஷின கன்னடா மாவட்ட ஆட்சியர் ஏ.பி. இப்ராஹிம் மற்றும் புத்தூர் எம்எல்ஏ சகுந்தலா ஷெட்டி (காங்கிரஸ்) ஆகியோரின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்து கோயில் திருவிழா அழைப்பிதழில் இஸ்லாமிய அதிகாரியின் பெயரை அச்சிடுவது ஆகம விதிகளுக்கு முரணானது என கூறி மங்களூரு நகர பஜ்ரங் தளம், விஸ்வ ஹிந்து பரிஷத், ராம் சேனா உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும் அழைப்பிதழில் இருந்து மாவட்ட ஆட்சியரின் பெயரையும் இந்துக்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் எம்எல்ஏவின் பெயரையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் இல்லாவிடில் கோயில் நிர்வாகத்தை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தன..

இதையடுத்து மஹாலிங்கேஸ் வரா கோயில் நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. இப்ராஹிம், காங்கிரஸ் எம்எல்ஏ சகுந்தலா ஷெட்டி ஆகியோரின் பெயரை நீக்கிவிட்டு, புதிய அழைப்பிதழை அச்சிட்டு விநியோகிக்க தொடங்கி யுள்ளது. இந்துத்துவா அமைப்பின ரின் மிரட்டலுக்கு பணிந்து கோயில் நிர்வாகம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ சகுந்தலா ஷெட்டி கூறும்போது '' இஸ்லாமிய மாவட்ட ஆட்சியரின் பெயரை நீக்கியதற்கு இந்து ஆகம விதிகளை காரணமாக கூறுவது பொருத்தமற்றது. இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கடவுளும், கோயிலும் அனை வருக்கும் பொதுவானது. அதனை யாரும் உரிமை கொண்டாட முடியாது'' என்றார்.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x