Published : 05 Jun 2014 05:56 PM
Last Updated : 05 Jun 2014 05:56 PM

சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினர் ஆதரவாளர்கள்

ஆந்திர மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மனை சந்தித்த தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள், சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நேற்று திருப்பதியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், சந்திரபாபு நாயுடு ஏகமனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர்கள் யனமலா ராமகிருஷ்ணுடா, கிருஷ்ண மூர்த்தி, மண்டலி புத்த பிரசாத், துலிபல்லா நரேந்திரா ஆகியோர் ஆளுநர் நரசிம்மனை சந்தித்தனர்.

அப்போது, பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் நேரம், இடம் ஆகிய விபரங்கள் குறித்து ஆளுநர் கேட்டறிந்தார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து, இன்று மாலை சந்திரபாபு நாயுடுவை அழைத்து ஆளுநர் பேசுவார் என்றும், ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீமாந்திராவின் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவுக்கு ரூ. 10 கோடி செலவில் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை கட்சியினர் செய்து வருகின்றனர்.

சீமாந்திராவின் (தெலங்கானா மாநிலப் பகுதியை தவிர்த்த ஆந்திரப் பிரதேசம்) முதல் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் 8-ம் தேதி பதவியேற்க உள்ளார். விஜயவாடா-குண்டூர் இடையே உள்ள ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் இவ்விழா நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x