Last Updated : 18 Mar, 2016 10:09 AM

 

Published : 18 Mar 2016 10:09 AM
Last Updated : 18 Mar 2016 10:09 AM

தேர்தல் பார்வையாளர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்: தேர்தல் ஆணைய முன்னாள் ஆலோசகர் கே.ஜே.ராவ் பேட்டி

மத்திய தேர்தல் ஆணைய முன்னாள் செயலாளர் கே.ஜே.ராவ். 2002-ல் இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து சுமார் 4 ஆண்டுகள் தேர்தல் ஆணைய ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.

தற்போது, டெல்லியில் கட்டிட விதிமீறல்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த கண்காணிப்பு குழுவின் உறுப்பினராக உள்ளார். தமிழகத்தில் கடந்த 2002-ல் சைதாப் பேட்டை, ஆண்டிப்பட்டி, வாணியம் பாடி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிரடியாக பணியாற்றிவர் கே.ஜே.ராவ். இவர் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழு மையாக அமல்படுத்தப்படுகிறதா?

தேர்தல் அறிவித்த மறுநிமிடமே நடத்தை விதிமுறைகள் அமலாகி விடும். அதேசமயம் விதிமீறல்களும் உடனடியாகத் தொடங்கி விடுகின்றன. இதை சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள அதிகாரி களால் முழுமையாகக் கண்காணிப் பது கடினம். எனவே, அங்கு தேர்தல் பார்வையாளர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். மத்திய தேர்தல் ஆணையம் இவர் களை தேர்ந்தெடுத்து மாநிலங் களுக்கு அனுப்புவதற்குள் வேட்பு மனு தாக்கல் தொடங்கி விடுவது வழக்கமாக உள்ளது.

தமிழகம் போன்ற மாநிலங்களில் பெரும்பாலான கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமீறலுக்கு பெயர் போனவை. தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே சட்டத்தை மீறி தனியார் சுவர்களில் எழுதுவதும், அனுமதியின்றி பெரிய அளவுகளில் கட்-அவுட் வைப்பது போன்ற விதிமீறல்கள் தொடங்கி விடுகின்றன.

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு இலவசங்கள் அளிக்கப்படுவதை முழுமையாகத் தடுக்க நீங்கள் கூறும் யோசனை என்ன?

தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க அங்கு பணியமர்த்தப் படும் தேர்தல் பார்வையாளர்கள் 24 மணி நேரமும் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம். இது அவருக்கு கீழ் பணியாற்றுவோருக்கும் பொருந்தும். இதை விடுத்து அதிகாரி கள் தங்கள் அலுவலகங்களில் அமர்ந்து கொண்டு கண்காணிக்க முயன்றால் நிச்சயமாக முடியாது.

தேர்தல் விதிமீறல் வழக்குகளை விரைந்து முடிக்க என்ன வழி?

தற்போதைக்கு இது ஆட்சிக்கு வரும் மாநில அரசின் கையில் தான் உள்ளது. அவர்கள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் எந்த வழக்கையும் வாபஸ் பெற முடியாது. என்றாலும் இந்த வழக்கு களை விரைந்து முடிக்க தனி நீதி மன்றம் அல்லது விரைவு நீதிமன்றங் கள் அமைக்க மாநில அரசுகள் முன்வரவேண்டும். தவறு செய்பவர் கள் பிடிபடும்போதும் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்படும் போதும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பெயர்களை உடனடியாக வெளி யிடும் நிலை உருவாக வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசு களால் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டி இருக்கும். தற் போதைய சூழலில் இதற்கு எந்தக் கட்சியும் முன்வரும் என்று எனக்குத் தோன்றவில்லை.

தேர்தல் விதிமீறல்களில் மற்ற மாநிலங்களை விட நீங்கள் தமிழகத்தில் கண்ட புதிய யுக்திகள் என்ன?

வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா புகார்கள் தமிழகத்தில் அதிகம் வருகின்றன. இதில் டோக்கன் அளித்துவிட்டு பிறகு பணம் அல்லது பொருள் தருவது என பலவகையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக கேள்விப்படு கிறேன். தமிழகத்தில் தேர்தல் பார்வையாளர்கள் விழிப்புடன் பணியாற்றுவது அவசியம்.

இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் தேர்தல் ஆணையத் திற்கு பெரிய வரப்பிரசாதம். என்றா லும் பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் தாமாக முன்வந்து தவறு செய்யாமல் இருக்க வேண்டும். இதன் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜே.எம்.லிங்டோ, என்.கோபால்சாமி, டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகிய முன்னாள் தேர்தல் அதிகாரிகளுடன் நானும் இணந்து ‘மேம்பட்ட தேர்தல் நிர்வாக அமைப்பு (Foundation for Advanced Management of Elections)’ என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வரு வதை நீங்கள் அறிவீர்கள். இதன் சார்பில் தமிழகத்திலும் விரைவில் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் நடத்த இருக்கிறோம்.

தேர்தல் விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என கருதுகிறீர்களா?

இதற்கான அவசியம் தொடர்ந்து தேவைப்படுகிறது. ஆனால் ஆட்சி யாளர்களாக அமரும் அரசியல் வாதிகளின் ஒத்துழைப்பு இன்றி இதை நடைமுறைப்படுத்த முடியாது. குற்ற வழக்கில் 2 ஆண்டு களுக்கு மேல் தண்டனை பெற்றவர் கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பே இதற்கு காரணம். கடவுள் அருளால் இதுபோன்ற உத்தரவுகள் அவ்வப்போது நமக்கு கிடைத்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x