Published : 09 Mar 2016 07:48 AM
Last Updated : 09 Mar 2016 07:48 AM

உடல் பருமனில் பஞ்சாப் முதலிடம்

உடல் பருமனான மக்கள் அதிகம் வாழும் மாநிலங்கள் பட்டியலில் பஞ்சாப் முதலிடத்தில் உள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மாநிலங்களவையில் நேற்று அளித்த பதிலில் கூறியதாவது:

கடந்த 2013-ம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி நாட்டில் 6.5 கோடி பேர் உடல் பருமன் மிக்கவர்களாக இருந்தனர். 2014-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 6.68 கோடியாகவும் 2015-ம் ஆண்டில் 6.91 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

உடல் பருமனான மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் பஞ்சாப் முதலிடத்தில் உள்ளது. கேரளா, டெல்லி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

உடல் மெலிதான ஆண்கள் அதிகம் வாழும் மாநிலங்கள் பட்டியலில் திரிபுராவும் உடல் மெலிதான பெண்கள் பட்டியலில் மேகாலயாவும் முதலிடத்தில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x