Published : 30 Nov 2021 03:06 AM
Last Updated : 30 Nov 2021 03:06 AM

கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள்; 2022 மார்ச் மாதம் வரை நீட்டிப்பு: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

புதுடெல்லி

ஏழைகளுக்கு ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்கும் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம்அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றுபிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கடந்த 2020 மார்ச் மாதம்கரோனா வைரஸ் தொற்று பரவல் தொடங்கிய நிலையில், முழுமையான பொது முடக்கம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு சிரமப்படக் கூடாது என்று மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி, பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்னும் ஏழைகளுக்கான நலத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் உள்ள 80 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு, ரேஷனில் இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நோக்கில்3 மாதங்களுக்கு அறிமுகப்படுத் தப்பட்ட இத்திட்டம், 2021 நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் இந்த மாதத்துடன் நிறைவடையும் நிலையில் வரும் 2022 மார்ச் வரை இத்திட்டம் நீட்டிக் கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி நேற்று கூறியதாவது:

கரோனா வைரஸ் பரவி வந்தகாலத்தில் ஏழை மக்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக கரீப் கல்யாண் திட்டத்தை அறிமுகம் செய்தோம். இதன்மூலம் நாட்டிலுள்ள 80 கோடி ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் ரேஷனில் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது இந்தத் திட்டத்தை வரும் 2022 மார்ச் வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் 100 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்தியுள்ளோம். தற்போது 150 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x