Last Updated : 21 Mar, 2016 10:53 AM

 

Published : 21 Mar 2016 10:53 AM
Last Updated : 21 Mar 2016 10:53 AM

908 ஐபிஎஸ் அதிகாரி பணியிடங்கள் காலி

நாடு முழுவதும் அங்கீகரிக்கப் பட்ட ஐபிஎஸ் பணியிடங்கள் எண் ணிக்கை 4,802. கடந்த ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி 3,894 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியில் உள்ளனர். இதில் 2015-ம் ஆண்டில் தேர்வான 140 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆக 908 பணியிடங்கள் காலியாக உள்ளன.

நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மட்டும் அதிகபட்சமாக 114 ஐபிஎஸ் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுபோல மேற்குவங்கம் (88), ஒடிசா (79), கர்நாடகா (72), மகாராஷ்டிரா (63), மத்தியப் பிரதேசம் (56), ஜம்மு காஷ்மீர் (56), யூனியன் பிரதேசங்கள் (50) காலிப் பணியிட எண்ணிக்கையில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

இதுகுறித்து உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “நாட்டின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஐபிஎஸ் அதிகாரி பணியிடங்கள் பற்றாக்குறை மிகப்பெரிய அளவில் இருப்பது தெரியவரும். இந்த பற்றாக்குறையைக் குறைக்க அரசு முயற்சி எடுத்தாலும், இது தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகள் அதற்கு தடையாக உள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x