Last Updated : 22 Mar, 2016 10:12 AM

 

Published : 22 Mar 2016 10:12 AM
Last Updated : 22 Mar 2016 10:12 AM

எதிர்ப்புகள் கிளம்பியதால் கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பிரபல நடிகை லலிதா மறுப்பு

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பிரபல நடிகை கே.பி.ஏ.சி.லலிதா மறுத்துள்ளார்.

பிரபல கேரள நடிகை கே.பி.ஏ.சி.லலிதா (69). தமிழில் காதலுக்கு மரியாதை உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கேரள சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் 16-ம் தேதி நடக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் சார்பில் திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரி தொகுதி யில் நடிகை லலிதா போட்டியிடுவார் என்று தகவல் வெளியானது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் பொலிட்பிரோ உறுப்பினர் பினராய் விஜயன் நேற்று செய்தியாளர் களிடம் கூறுகையில், ‘‘நடிகை லலிதா தேர்தலில் போட்டியிட விரும்பினால், அவரை வடக்கஞ் சேரி வேட்பாளராக நிறுத்த மார்க்சிஸ்ட் தயாராக இருக்கிறது. எங்கள் கட்சி சார்பில் அவர் போட்டியிட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். மேலும், லலிதா போன்ற வேட்பாளர்கள் களம் இறங்கினால், எங்கள் கட்சியின் மதிப்பு கூடும்’’ என்றார்.

இதற்கிடையில் லலிதா போட்டி யிடுவதை கண்டித்து இந்திய ஜன நாயக இளைஞர் சம்மேளனத்தை (டிஒய்எப்ஐ) சேர்ந்த இளைஞர்கள் நேற்றுமுன்தினம் வடக்கஞ்சேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கண்டன போஸ்டர்களும் ஒட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் சார்பில் தேர்தலில் போட்டியிட வில்லை என்று லலிதா நேற்று திட்டவட்டமாக கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம் லலிதா கூறுகையில், ‘‘திரைப்பட வேலைகள் மற்றும் உடல் நலம் போன்ற காரணங்களால் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. மேலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்த தால் நான் போட்டியில் இருந்து விலகவில்லை. தேர்தலில் போட்டி யிட விருப்பமில்லை என்ற முடிவை மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களிடம் ஏற்கெனவே கூறியிருக்கிறேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x