Last Updated : 11 Mar, 2016 09:08 AM

 

Published : 11 Mar 2016 09:08 AM
Last Updated : 11 Mar 2016 09:08 AM

டெல்லியில் ஜேஎன்யூ மாணவர் தூக்கிட்டு தற்கொலை

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) ஆய்வு மாணவர் ஒருவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

துஷ்யந்த் தீட்சித் (28) என்ற இந்த மாணவர் உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி மாவட்டம், தனேட்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தெற்கு டெல்லி, பெர் சராய் பகுதியில் கார்டியன் என்ற தனியார் விடுதியில் தங்கி, ஜேஎன்யூ.வில் படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு அவரது நண்பர்களில் ஒருவர் அறைக் கதவை தட்டிய போது, உள்ளேயிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது மின்விசிறியில் துஷ்யந்த் தூக்கிட்டு தொங்குவது தெரியவந்தது. தகவ லின் பேரில் போலீஸார் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர்.

போலீஸாரின் முதல்கட்ட விசா ரணையில் குடும்பப் பிரச்சினை யால் துஷ்யந்த் மனம் உடைந்து காணப்பட்டதாக தெரிய வந் துள்ளது. தற்கொலை குறிப்பும் அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி காவல் துறை துணை ஆணையர் பிரேம்நாத் கூறும்போது, “விடுதி யின் 4-வது மாடியில் உள்ள அந்த அறையில் துஷ்யந்த் மட்டுமே தங்கி யிருந்தார். அவரது தற்கொலைக் கும் ஜேஎன்யூவின் சமீபத்திய நிகழ்வுகளுக்கும் தொடர்பு இல்லை” என்றார்.

கண்ணய்யா மீது தாக்குதல்

ஜேஎன்யூ-வில் நேற்று தேசிய வாதம் மீதான வகுப்பு நடை பெற்றது. இதில் கண்ணய்யா குமாரும் பங்கேற்றார். அப்போது, ஒருவர் கண்ணய்யாவை விவாதத் துக்கு அழைத்தார். இதையடுத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது திடீரென அந்த நபர் கண்ணய்யாவை அடித்தார். உடனடியாக அங்கு விரைந்த பாதுகாவலர்கள் அவரை மீட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x