Published : 18 Oct 2021 03:09 AM
Last Updated : 18 Oct 2021 03:09 AM

2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டில் இந்துக்கள் மக்கள் தொகை 16.8 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி

கடந்த 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் இந்துக்கள் மக்கள் தொகை 16.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 1991, 2001, 2011-ம் ஆண்டுஎடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகை 1991 முதல் 2001 வரையிலான காலத்தில் 21.5 சதவீதமும் 2001 முதல் 2011 வரையிலான காலத்தில் 17.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதில் முஸ்லிம் மக்கள்தொகை வெகுவாக அதிகரித்துள்ளது. 1991 முதல் 2001-ம் ஆண்டு வரையில் முஸ்லிம் மக்கள் தொகை 29.3 % அதிகரித்துள்ளது. 2001 முதல் 2011 வரைமுஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சி 24.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

அப்போது காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படவில்லை. 2011-ல்தான் காஷ்மீர் மக்கள் தொகையானது நாட்டில் சேர்த்து கணக்கெடுக்கப்பட்டது.

இந்துக்களின் மக்கள்தொகை 1991 முதல் 2001-ம் ஆண்டு வரை 19.9 சதவீதமும், 2001 முதல் 2011 வரை 16.8 சதவீதமும் அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் கடந்த 20 ஆண்டுகளில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் இந்துக்களைவிட குறைந்துள்ளது என்பதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதாவது 2001 முதல் 2011-ம்ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முந்தைய 10 ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்து மக்கள் தொகை வளர்ச்சி 3.1 சதவீதம் குறைந்துள்ளது. அதேநேரத்தில் இதே காலகட்டத்தில் முஸ்லிம்மக்கள் தொகை வளர்ச்சி 4.7 சதவீதம் சரிந்துள்ளது.

இதே காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர்கள், ஜெயின் இனத்தவர்களின் மக்கள் தொகை விகிதமானது முஸ்லிம்களின் மக்கள் தொகை உயர்வைவிட குறைந்துள்ளது.

2001 முதல் 2011 வரையிலான காலத்தில் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை வளர்ச்சி 7 சதவீதமும், சீக்கியர்களின் மக்கள் தொகை வளர்ச்சி 8.5 சதவீதமும், புத்த மதத்தவர்களின் மக்கள் தொகை வளர்ச்சி 16.6 சதவீதமும், ஜெயின் இனத்தவர்களின் மக்கள் தொகை வளர்ச்சி 20.5 சதவீதமும் குறைந்துள்ளது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x