Published : 04 Oct 2021 07:24 AM
Last Updated : 04 Oct 2021 07:24 AM

கரோனா வைரஸ் பரவல் சூழலை பிற நாடுகளைவிட இந்தியா சிறப்பாக கையாண்டது: ஓபன் இதழுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி தகவல்

கரோனா வைரஸ் பரவல் சூழலை வளர்ந்த நாடுகளை விட மத்திய அரசு சிறப்பாக கையாண்டது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பிரபல 'ஓபன்' இதழுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் பெருந்தொற்று உலகின் பெருந்துயரமாக உருவெடுத்தது. இந்தப் பிரச்சினையை வளர்ந்த மற்றும் சக நாடுகளைவிட இந்தியா சிறப்பாக கையாண்டது. கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளது. சுயசார்பு இந்தியா திட்டத்தால் இது சாத்தியமாகி உள்ளது.

நான் விமர்சனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். ஆனால் துரதிருஷ்டவசமாக விமர்சகர்கள் குறைவாகவே உள்ளனர்.
பெரும்பாலும் உள்நோக்கத்துடன் குற்றம் சாட்டுபவர்களாகவே உள்ளனர். எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு கடின உழைப்பு, ஆராய்ச்சி அவசியம். ஆனால் பரபரப்பான இன்றைய சூழலில் இதற்கெல்லாம் நேரம்
இல்லாததால் குற்றம் சாட்டுபவர்கள் மட்டுமே அதிகமாக உள்ளனர். இதனால் விமர்சகர்களை சில நேரங்களில் நான் தவறவிடுகிறேன்.

சிறிய வயதில் எனக்கு அரசியலுடன் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் சில நண்பர்கள் கட்டாயப்படுத்தியதன் காரணமாகவே நான் அரசியலில் நுழைந்தேன். அங்கு கூட, சேவை போன்ற பணிகளை செய்யும் நிலையில்தான் இருந்தேன்.

பிறருக்காக பணியாற்றுவது எப்போதும் எனக்கு தன்னிறைவை ஏற்படுத்தியது. மன ரீதியாக அதிகாரம், கவர்ச்சியான இந்த உலகத்
திலிருந்து நான் எப்போதும் விலகியே இருந்தேன். இதனால்தான் பொதுமக்களைப்போல சிந்தித்து எனது கடமை பாதையில் செல்கிறேன். ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுடன் உரையாடியது மிகப் பெரிய அனுபவம். பயிற்சி, இதர உதவிகளை மத்திய அரசு செய்து கொடுத்ததை அவர்கள் வெகுவாகப் பாராட்டினர். எனினும், விளையாட்டு போட்டிகளில் நாட்டுக்காக அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்திருக்கின்றனர்.

இளைஞர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டியது அவசியம். எப்போதும் பிறரை சார்ந்திருக்கும் நிலையை இளை
ஞர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அதேநேரத்தில் இளைஞர்கள் சுயசார்புடன் உருவாவதற்கு நாம் உதவி செய்ய வேண்டும்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்த நிர்வாக மாதிரியானது அடுத்த அரசை கட்டமைப்பதை நோக்க
மாகக் கொண்டிருந்தது. ஆனால், என்னுடைய அடிப்படை எண்ணங்கள் வேறு. நாட்டை கட்டமைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அரசை நடத்துகிறோம் என நான் நம்புகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x