Last Updated : 22 Feb, 2016 07:50 AM

 

Published : 22 Feb 2016 07:50 AM
Last Updated : 22 Feb 2016 07:50 AM

கர்நாடக முதல்வர் மீது பிளாஸ்டிக் பை வீச்சு

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிளாஸ்டிக் பை வீசப்பட்டது.

பெங்களூரு ரவீந்திர கலாஷேத்ர அரங்கத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பங்கேற் றார். அவர் பேசத் தொடங்கிய போது, அரங்கின் உப்பரிகையில் நின்று கொண்டிருந்த ஒருவர் எழுந்து நின்று, “நீங்கள் எங்கள் சமூகத்துக்காக என்ன செய்தீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள்” எனக் கூக்குரல் எழுப்பியபடி, அவர் மீது பிளாஸ்டிக் பை ஒன்றை வீசினார். அதனை வெடிகுண்டு என அவர் தெரிவித்தார்.

அந்த பை மேடைக்கு அருகில் சென்று விழுந்தது. அங்கு, முன்னாள் தலைமை நீதிபதி எம்.என். வெங்கடாச்சலய்யா, மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

உடனடியாக அந்த பையை அங்கிருந்து எடுத்த பாதுகாப்புப் படையினர், அந்த நபரையும் வெளி யேற்றினர். அந்நபர் வீசிய பிளாஸ்டிக் பையில் சாக்லேட் உறைகள் இருந்தன.

பெங்களூரு நகர காவல் துணை ஆணையர் சந்தீப் பாட்டில் கூறும் போது, “அந்நபரின் பெயர் பிஎஸ் பிரசாத், புருஹத் பெங்களூரு மஹனகரா பாலிக் வனச்சரகத்தில் பணிபுரிகிறார். போலீஸாரின் கேள்விக்கு அவர் வினோதமாக பதிலளிக்கிறார். மாநிலங்களவை உறுப்பினராவதற்காகவே அவர் இங்கு வந்ததாகக் கூறுகிறார். அவரின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைச் சேகரிக்கிறோம்” என்றார்.

இதுகுறித்து, முதல்வர் சித்தராமையாவிடம் செய்தியாளர் கள் கேட்டதற்கு, “அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவில்லை. எந்த சாதியெல் லாம் ஒடுக்கப்பட்டிருக்கிறதோ அதற்காக பாடுபடுகிறோம். இது போன்ற நிகழ்வுகள் ஜனநாயகத் தில் சாதாரணம். பலமுறை இச் சூழலை சந்தித்திருக்கிறேன். பாது காப்புக் குறைபாடாக இதனை நான் கருதவில்லை. பொதுஜனம் போல ஒருவர் வந்து, இதனைச் செய்தால் என்ன செய்ய முடியும். ஜனநாயகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் சாதாரணம்தான். இல்லாவிட்டால் அது எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும்” என பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x