Published : 06 Feb 2016 09:11 AM
Last Updated : 06 Feb 2016 09:11 AM

உ.பி.யில் பெண் ஆட்சியருடன் ‘செல்பி’ எடுக்க முயன்றவருக்கு சிறை

உத்தரப் பிரதேசத்தில் பெண் ஆட்சியருடன் ‘செல்பி’ எடுக்க முயன்ற 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாகர் மாவட்ட ஆட்சிய ராக பி.சந்திரகலா என்பவர் பதவியில் உள்ளார். இவர் அண்மையில் கமல்பூர் என்ற கிராமத்தில் அப்பகுதி மக்களிடம் உள்ளூர் பிரச்சினைகள் தொடர்பாக பேசிக்கொண்டிருந் தார். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த பரத் அகமது என்ற 18-வது இளைஞர் ஆட்சியருடன் செல்பி எடுக்க முயன்றார். இதற்கு ஆட்சியர் சந்திரகலா ஆட்சேபம் தெரிவித்துள் ளார். ஆனால் அந்த இளைஞர், ஆட்சியருடன் நெருங்கிச் சென்று மீண்டும் மீண்டும் செல்பி எடுத்துள்ளார்.

இந்நிலையில் ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் பரத் அகமது கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடந்த வியாழக் கிழமை அந்த இளைஞர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கூறும்போது, “எனது அனுமதி இல்லாமல் படம் பிடிக்கக் கூடாது என்று அந்த இளைஞரிடம் நான் கூறிய பிறகும் அவர் தொடர்ந்து படம் எடுத்துக்கொண்டிருந்தார்.

இது என்னை அதிர்ச்சியடைச் செய்தது. கேமரா உங்களு டையதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் படம்பிடிக்க விரும்பும் நபரின் ஒப்புதல் வேண்டுமல்லவா?” என்றார்.

சந்திரகலா, 2008-ம் ஆண்டு பேட்ச், உ.பி. கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு, தரமற்ற சாலைப் பணிக்கான அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களை பொதுமக்கள் முன்னிலையில் திட்டியதன் மூலம் புகழ்பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x