Last Updated : 04 Feb, 2016 08:08 AM

 

Published : 04 Feb 2016 08:08 AM
Last Updated : 04 Feb 2016 08:08 AM

முன்னாள் சபாநாயகர் பல்ராம் ஜாக்கர் காலமானார் - தலைவர்கள் இரங்கல்

சொந்த ஊரில் இன்று இறுதிச்சடங்கு



* காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மக்களவை சபாநாயகருமான பல்ராம் ஜாக்கர் நேற்று காலமானார். அவருக்கு வயது 92.

மக்களவையில் கடந்த 1980 முதல் 1989-ம் ஆண்டு வரை சபாநாயகராக பதவி வகித்து, நாடாளுமன்றத்தை திறம்பட நடத்தியவர் என்ற பெருமைக் குரியவர் பல்ராம் ஜாக்கர். நாடாளுமன்ற பணிகளை கணினிமயமாக்கியதில் முக்கிய பங்காற்றியவர். நாடாளுமன்றத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கும் தூண்டுகோலாக இருந்தவர். நரசிம்மராவ் பிரதமராக பதவி வகித்த காலத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். 2004 முதல் 2009 வரை மத்தியப் பிரதேச ஆளுநராகவும் பதவி வகித்தார். கடந்த ஓராண்டாக மூளை பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலை யில் உடல்நிலை மோசமடைந்ததில் நேற்று காலை 7 மணியளவில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான பஞ்ச் கோசியில் இன்று நடைபெறு கிறது.

தலைவர்கள் இரங்கல்

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ‘ட்விட்டரில்’ எழுதியுள்ள இரங்கல் செய்தியில், ‘‘எனது நீண்ட கால நண்பரும், சக நாடாளுமன்றவாதியுமான பல்ராம் ஜாக்கர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். தேச சேவையில் மதிப்புமிக்க அவரது பங்களிப்பை இந்தநாடு எப்போதும் மறக்காது’’ என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ‘ட்விட்டர்’ இரங்கல் செய்தியில், ‘‘தனது நீண்டகால அரசியல் பயணத்தில் நாடாளு மன்ற ஜனநாயகத்துக்கு மதிப்பை கூட்டியவர் பல்ராம் ஜாக்கர். அவரது மறைவு மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘நீண்டகால பொதுவாழ்வில் பல்ராம் ஜாக்கர் ஆற்றிய பணி களை காங்கிரஸ் கட்சியும், இந்த நாடும் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளும். வேளாண் மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் மக்கள் உள்ளத்தில் பசுமை யாக நீடித்திருக்கும். சபாநாயக ராக, நாடாளுமன்ற வாதியாக, அமைச்சராக, ஆளுநராக பல்வேறு பொறுப்புகளை சுமந்து திறம்பட பணியாற்றியவர்’’ என புகழாரம் சூட்டியுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x