Published : 15 Sep 2021 03:10 AM
Last Updated : 15 Sep 2021 03:10 AM

என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்: திரிணமூல் காங்கிரஸார் மீது பாஜக எம்.பி. அர்ஜுன் சிங் புகார்

என்னை கொலை செய்ய திரிண மூல் காங்கிரஸார் முயற்சி செய்கின்றனர் என்று பாஜக எம்.பி.அர்ஜுன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. இதன்பிறகு மாநிலம்முழுவதும் அரசியல் வன்முறை வெடித்தது. பாஜக தொண்டர்கள் மற்றும் அந்த கட்சியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த மே மாதத்தில் மட்டும் 17 பேர் கொலை செய்யப்பட்டனர். வீடு, உடைமைகள்எரிக்கப்பட்டன. ஆயிரக்கணக் கானோர் அண்டை மாநிலங்களில் தஞ்சமடைந்தனர்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அரசியல் வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் முதல்வர் மம்தா அரசை கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளது. எனினும் இன்றுவரை அரசியல் வன்முறை தொடர்வதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டி வரு கின்றனர்.

வெடிகுண்டு வீச்சு

இந்த சூழலில் மேற்குவங்கத்தின் பாரக்போர் மக்களவை தொகுதி எம்.பி. அர்ஜுன் சிங்கின்வீட்டின் மீது நேற்று காலை மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது:

வடக்கு 24 பர்கானஸில் உள்ள எனது வீட்டின் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. என்னை கொலை செய்ய திரிணமூல் காங்கிரஸார் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீஸில் புகார் செய்துள்ளேன். ஆனால் மாநில போலீஸார் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

கடந்த 8-ம் தேதியும் எனது வீட்டின் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் வாயில் கதவு சேதமடைந்தது. தற்போது 2-வது முறையாக வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. ஆளும் கட்சியினரின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாத்போரா தொகுதி பாஜக எம்எல்ஏ பவன் சிங் கூறியதாவது:

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. தற்போது பவானிபூர் இடைத்தேர் தலில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுவதால் பாஜகவினரை அச்சுறுத்தும் வகையில் மீண்டும் மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்தப் படுகின்றன.

பவானிபூர் இடைத்தேர்தலில் பாஜகவுக்காக வாக்குகளை சேகரித்து வருகிறேன். இதன் காரணமாக எனது குடும்பத்தினரை குறிவைத்து ஆளும் திரிணமூல் காங்கிரஸார் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x