Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடும் வகையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பானிபூரியை இலவசமாக வழங்கிய வியாபாரி

பானி பூரியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் வியாபாரி அஞ்சல் குப்தா.

போபால்

பெண் குழந்தை பிறந்ததால் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பானி பூரியை பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்து கொண்டாடியுள்ளார் போபாலை சேர்ந்த வியாபாரி.

மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்தவர் அஞ்சல் குப்தா. தள்ளுவண்டியில் பானி பூரி வியாபாரம் செய்து வருகிறார். 28 வயதாகும் இவருக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விதமாக தனது பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு இலவசமாக பானி பூரி விநியோகம் செய்துள்ளார் குப்தா. ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பானி பூரியை இவர் இலவசமாகவே கொடுத்து கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்து அஞ்சல் குப்தா கூறும்போது, “பிறப்பில் ஆண், பெண் பேதம் பார்க்கக்கூடாது. இதை அனைத்து மக்களும் கடை பிடிக்கவேண்டும். அதற்காகத்தான் நான் இலவசமாக பானி பூரியை பொதுமக்களுக்கு கொடுத்தேன்.

என் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததைக் கேள்விப்பட்ட சில உறவினர்கள், உனக்கு பொருளாதார சுமை ஏற்படும், கஷ்டம் வந்து சேரும் என்று எச்சரிக்கை செய்தனர். ஆனால் அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை.

பெண் குழந்தை பிறந்ததால் நான் பெருமை அடைகிறேன். நான்சிறு வியாபாரிதான். எனக்கு சிறிதளவுதான் லாபம் கிடைக்கிறது. இருந்தாலும் எனக்கு அது போதும்.குழந்தை பிறப்பில் ஏன் பேதம்பார்க்க வேண்டும். பெண் குழந்தைகளைப் பெற்ற அனைத்துபெற்றோருமே அதிர்ஷ்டசாலிகள் தான். இதை உலகுக்கு உணர்த்து வதற்காகவே பானி பூரியை கடந்த ஞாயிற்றுக்கிழமை இலவசமாக விநியோகம் செய்தேன்.

போபாலின் கோலார் பகுதியிலுள்ள பீமா கஞ்ச் சாலை முழுவதும் உள்ள மக்களுக்கு பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாகக் கொடுத்தேன். கரோனா விதிகளைகடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். சிலர் வரிசையை கடைப்பிடிக்காமல் முண்டியடித் தனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x