Last Updated : 31 Aug, 2021 03:12 AM

 

Published : 31 Aug 2021 03:12 AM
Last Updated : 31 Aug 2021 03:12 AM

உ.பி.யின் பெரோஸாபாத்தில் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு 46 பேர் உயிரிழப்பு: தொகுதி பாஜக எம்எல்ஏ மணிஷ் அசிஜா புகார்

புதுடெல்லி

உ.பி.யில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெரோஸாபாத் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி, உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 4 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பெரோஸாபாத் பாஜக எம்எல்ஏ மணிஷ் அசிஜா நேற்று கூறும்போது, “இன்று காலை எனக்கு கிடைத்த தகவலின்படி 6 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர். மாவட்டத்தில் கடந்த 22-ம் தேதி முதல் இதுவரை 46 பேர் இறந்துள்ளனர். தாழ்வான இடங்களில் குப்பைகளுடன் கலந்து மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சியில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

இதுபோன்ற சூழலில் நடவடிக்கை எடுப்பதற்காக பெரோ ஸாபாத்திற்கு 50 வாகனங்களை மாநில அரசு கடந்த ஏப்ரலில் அனுப்பியது. எனினும் இரண்டு தினங்களுக்கு முன்புதான் இந்த வாகனங்கள் தூய்மைப் பணியில் இறக்கிவிடப்பட்டுள்ளன” என்றார்.

அமைச்சர் மறுப்பு

எல்எல்ஏ மணிஷ் அசிஜாவின் புகாரை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்த செய்தி தவறானது. இது தொடர்பாக அறிக்கை எதுவும் அரசுக்கு வரவில்லை. எனினும் இது தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் நான் அப்பகுதிக்கு செவ்வாய்க்கிழமை செல்கிறேன்” என்றார்.

பெரோஸாபாத்தில் டெங்கு வால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட மருத்துவமனை மற்றும்அருகிலுள்ள ஆக்ரா அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 900 பேர் 12 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட் டுள்ளதாக கணக் கிடப்பட்டுள்ளது. இவர்களில் 20 குழந்தைகள் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனிடையே, மதுராவின் கோஹி கிராமத்தில் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதில் 9 குழந்தைகள் உயிரிழந் துள்ளனர். 6 பேர் மதுரா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x