Published : 29 Aug 2021 06:10 AM
Last Updated : 29 Aug 2021 06:10 AM

மத்திய அரசு பணியாளர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு

புதுடெல்லி 

மத்திய அரசு பணியாளர்களுக்கு மேலும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. ஏற்கெனவே 28 சதவீதம் அகவிலைப்படி (டிஏ) அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் கூடுதலாக 3 சதவீதம் அதாவது 31 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படும் என தெரிகிறது.

இதற்கு முன்பு 17 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. அது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஜூலை 2021 முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது மேலும் கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட உள்ளது. இது மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அனைவருக்கும் பொருந்தும்.

2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அப்போது 4 சதவீதம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 3 சதவீதம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 17 சதவீத அகவிலைப்படி அறிவிக்கப்பட்டது. அத்துடன் 11 சதவீதம் கூடுதலாக சேர்க்கப்பட்டு 28 சதவீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஜூன் மாதம் முதல் 3 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x