Last Updated : 13 Feb, 2016 09:17 AM

 

Published : 13 Feb 2016 09:17 AM
Last Updated : 13 Feb 2016 09:17 AM

ராணுவத்துக்கு சவாலாக விளங்கும் இமயத்தின் எல்லைகள்: சியாச்சினில் எதிரிகளைவிட ஆபத்தான பனிப்படலம்

இமயமலைப் பகுதியில் பாகிஸ் தான் எல்லையை ஒட்டி சியாச்சின் கார்கில் ஆகிய பகுதிகளும் சீன எல்லையை ஒட்டி அருணாச்சலப் பிரதேசமும் அமைந்துள்ளன. இவற்றில் சியாச்சினில் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி வீசிய பனிப்புய லுக்கு ஹனுமந்தப்பா உள்ளிட்ட 10 வீரர்கள் பலியாகினர். ஜம்மு-காஷ்மீர் மாநில இமயமலைப் பகுதி யில் லே லடாக்கை விட உயர மான இடத்தில் சியாச்சின் அமைந் துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 19,500 அடி உயரம் கொண்ட சியாச் சினில் படிப்படியான உயரங்களில் இந்திய ராணுவ முகாம்கள் உள்ளன. இவை, உலகின் அதிக உயர மான மற்றும் மிகவும் கடினமான போர்களமாகக் கருதப்படுகின்றன.

ஏனெனில், சியாச்சின் பனிமலை யில் மைனஸ் 45 டிகிரி வரையி லான குளிர் நிலவுவது வழக்கம். சியாச்சின் பனிக்கட்டிகள் மீது நேரடி யாகப் படும் நம் உடல் பகுதி கடும் குளிரில் உறைந்து ஒட்டிக்கொண்டு விடும். இதனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 சாதனங்கள் உட்பட 50 சாதனங் களை பாதுகாப்பு உடைகளாக அணி வது அவசியம். கழிவறை செல்லும் போது தேவையான இடத்தில் மட்டும் கழற்றும் வசதி இந்த ஆடை யில் இருக்கும். கீழ்ப்பகுதி முகாம் களில் உள்ள ‘ஹீட்டர் பங்கர்’ களுக்கு வந்த பிறகே குளிப்பதற்கு இந்த ஆடைகளை கழற்ற வேண் டும். இங்குள்ள வீரர்களுக்கு அதிக பசி இருக்காது. என்றாலும் சாக் லேட், ஹெல்த் ட்ரிங்க்ஸ் போன்ற அதிக கலோரிகள் கொண்டவற்றை உணவாக உட்கொள்கிறார்கள்.

உயிர்வாழ முக்கியமான ஆக்சி ஜன் அளவு சியாச்சினில் மிகவும் குறைவு. எனவே இங்கு பணியாற்ற வரும் ராணுவ வீரர்களுக்கு தலை வலி, ரத்தக் கொதிப்பு, மூச்சுத் திணறல், கடும் இருமல், சளி ஆகி யவை ஏற்படும். மூளை, குடல், தொண்டை, கை, கால்கள் போன்ற உடலின் பல பகுதிகளில் ரத்தம் கட்டு தலும் ஏற்படுவதுடன், சிலருக்கு நினைவு இழப்பும் ஏற்படுவது உண்டு. இதனால் சியாச்சினில் பணி யாற்றி திரும்பும் வீரர்கள் ராணுவத் தினர் இடையே சாதனையாளர்களா கப் பார்க்கப்படுகிறார்கள். ஆனால் இங்கு பணியாற்ற யாரும் கட்டாயப் படுத்தப்படுவதில்லை. அவரவர் தகுதி, திறமை மற்றும் உடல்வா குக்கு ஏற்றவாறு இமயமலைப்பகுதி களில் பணியமர்த்தப்படுகின்றனர். சியாச்சின் பணிக்கு தேர்ந்தெடுக் கப்படும் வீரர்கள் மற்றும் அதிகாரி களுக்கு லே-லடாக்கில் முறை யானப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதன் பிறகு படிப்படியான உயரத்தில் உள்ள முகாம்களில் சில நாட்கள் பணியில் அமர்த்தப் படுகின்றனர். இந்த ஒவ்வொரு முகா மிலும் அந்த வீரர்களின் உடல் அளிக் கும் ஒத்துழைப்பை கவனித்து, அடுத்த உயரத்தில் உள்ள முகாம் களுக்கு மாற்றப்படுகின்றனர். இவ் வாறு உச்சத்தில் இருக்கும் முகா முக்கு பணியாற்றச் செல்ல ஒரு வீரருக்கு குறைந்தது 5 மாதங்கள் ஆகிவிடும். உச்சியில் உள்ள முகா மில் அதிகபட்சம் 5 மாதங்களுக்கு மட்டுமே வீரர்கள் பணியமர்த்தப்படு கின்றனர்.

இங்கு இதற்கு மேல் பணியாற்றி னால் வீரர்கள் உயிர் வாழ்வது கடினம். இந்த காலகட்டத்தில் வீரர் களுக்கு ஒருநாள் கூட நிம்மதியான தூக்கம் கிடைக்காது. சியாச்சின் உச்சியில் உள்ள முகாம்களுக்கு நேரடியாக வந்து ஹெலிகாப்டரில் இறங்குபவர்களால் மற்ற வீரர்கள் போல் செயலாற்ற முடியாது. இவ்வாறு இறங்கிய அதிகாரிகள் பலர் உயிரிழந்துள்ளனர்.

கீழ் மட்டத்தில் உள்ள முகாம் ஒன்றுக்குதான் கடந்த தீபாவளி பண்டிகையின்போது சியாச்சின் வீரர்களுக்கு பிரதமர் மோடி நேரில் வந்து இனிப்பு வழங்கினார். இவ ருக்கு முன் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இங்கு வந்துள்ளார். இங்கு வருகை புரிந்த முதல் இந்திய பிரதமராக மன்மோகன்சிங் கருதப்படுகிறார்.

சியாச்சின் பாதுகாப்பு பணிக்காக கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ, 7,504.99 கோடி செலவிட்டுள்ளது. ஆனால், இவற்றில் சியாச்சினில் பணியாற்றும் வீரர்களுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கூட சம்பளத்தில் ஊக்கத்தொகை கிடையாது எனக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 3-ம் தேதி சியாச்சி னில் வீசிய பனிப்புயலால், 800x400 அடி அளவிலான மிகப்பெரிய பனிப் பாறை இந்திய ராணுவ முகாம் மீது விழுந்தது. இதனால் சுமார் 30 அடி ஆழம் வரை கான்கிரீட்டுகளை விடக் கடினமான பனிக்கட்டிகளை உடைத்து வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதற்காக அங்கு வீரர்களை இறக்க அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர்களும் ஆபத்தான சூழலில் தான் பயணிப்பதாகக் கூறப் படுகிறது. ரஷ்யக் கண்டுபிடிப்பான ‘சீட்டா’ எனும் பெயருடைய அந்த ஹெலிகாப்டர்களை இந்திய ராணு வத்தின் பைலட்டுகள் திறமையாக பறக்க வைப்பதாகவும், உண்மை யில் அந்த பனிச்சூழலில் பறப்பதற்கு ஏற்ற ஹெலிகாப்டர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறுகின்றனர்.

கடந்த 1984 ஆண்டு முதல் டிசம்பர் 11, 2015 வரை சியாச்சின் பனியால் மட்டும் 869 இந்திய ராணுவத்தினர் இறந்துள்ளனர்.

இதே காரணங்களால் பாகிஸ்தான் ராணுவமும் கடந்த 2003 முதல் 2010 வரை 213 வீரர்களை இழந்துள்ளது. இதை மனதில் வைத்து அங்கு இருநாடுகளும் சியாச்சின் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் தூதரக அதிகாரி அப்துல் பாஸித் கருத்து கூறியுள்ளார். ஆனால் இது போன்ற ஒரு சூழலைத்தான் பாகிஸ் தான் முன்னாள் ராணுவ ஆட்சி யாளர் பர்வேஸ் முஷாரப், தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கார்கிலை கைப்பற்ற முயன்றார். இதனால் போரில் ஏற்பட்ட உயிர்சேதங்களும் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியும் வரலாறு அறிந்தது ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x