Last Updated : 08 Feb, 2016 09:48 AM

 

Published : 08 Feb 2016 09:48 AM
Last Updated : 08 Feb 2016 09:48 AM

சியாச்சினில் இருந்து ராணுவம் வாபஸ் இல்லை

சியாச்சின் பனிமுகட்டில், பனிச் சரிவில் சிக்கி இந்திய ராணுவ வீரர் கள் 10 பேர் உயிரிழந்துள்ள நிலை யில், அங்கிருக்கும் படைகளை திரும்பப் பெறும் பேச்சுக்கே இட மில்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

பனிச்சரிவில் சிக்கி 10 வீரர்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கும் விஷயம். ஆனால், அதற்காக அங் கிருக்கும் படையை திரும்பப் பெறுவது என்பது பிரச்சினைக்கு தீர்வாகாது.

சியாச்சின் பனிமுகட்டை அமைதி மலை என அறிவிக்கும் கருத்துரு இன்னும் உயிர்ப்புடன் உள்ளதா என கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால், தேசத்தின் பாதுகாப்பு கருதித்தான் அங்கு படைகள் நிறுத் தப்பட்டுள்ளன.

வசதிகள் மேம்படுத்தப்பட்டிருப் பதால், சியாச்சினில் உயிரிழப்பு அண்மைக்காலமாக குறைந்து வருகிறது. அப்பகுதியை நமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற் காக ஆயிரக்கணக்கான வீரர்களை நாம் இழந்திருக்கிறோம்.

சியாச்சினில் நேர்ந்தது கணிக்க முடியாத இயற்கையின் சீற்றம். டன் கணக்கில் பனி மூடிவிட்ட தால், உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுவரை துளைத்துச் செல்லும் ராடார் உட்பட அதி நவீன இயந் திரங்கள் உதவியுடன் தேடும் பணி தொடர்கிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2005-ம் ஆண்டு சியாச்சின் பனி முகட்டை, இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லை மறுவரையறை ஏதுமின்றி அமைதி மலையாக அறிவிப்பதற்கான யோசனையை முன்வைத்திருந்தார்.

சியாச்சினில், கடல் மட்டத்திலி ருந்து 20 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் படைகளை நிறுத்தி யிருக்கின்றன. அதிகபட்ச குளிர் காரணமாக, இங்கு தட்பவெப்ப நிலை மைனஸ் 50 டிகிரி வரை செல்லும் என்பதால் ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 3-ம் தேதி, 10 இந்திய வீரர்களின் முகாம் பனிச்சரிவில் புதைந்ததில், 10 பேரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x