Last Updated : 26 Feb, 2016 10:57 AM

 

Published : 26 Feb 2016 10:57 AM
Last Updated : 26 Feb 2016 10:57 AM

ரயில்வே பட்ஜெட்டும் முன்னாள் ரயில்வே அமைச்சர்கள் கருத்தும்

மக்களை ஏமாற்றி விட்டது: லாலு பிரசாத் கருத்து

ரயில்வே பட்ஜெட் குறித்து முன்னாள் ரயில்வே அமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் நேற்று பாட்னாவில் கூறியதாவது:

இந்த பட்ஜெட் தடம் புரண்டுவிட்டது. ரயில்வே பட்ஜெட்டில் மக்கள் பெறுவதற்கு எதுவும் இல்லை. இது மக்களை ஏமாற்றிவிட்டது. பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இது மேலும் பலவீனமாகிவிடும்.

நான் அமைச்சராக பதவி வகித்த போது, ரயில்வே ரூ.60 ஆயிரம் கோடி உபரி வருவாய் ஈட்டியது. ஆளில்லா ரயில்வே கிராஸிங்களில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கானோர் இறக்கின்றனர். பட்ஜெட்டில் பாதுகாப்பு நோக்கு இல்லை. ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படவில்லை. வருவாய் ஈட்ட மாற்று வழிகள் காணப்படவில்லை. இவ்வாறு லாலு கூறினார்.

மற்றொரு முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறும் போது, “இந்த ரயில்வே பட்ஜெட், ஒரு மாய அறிக்கை. இந்த பட்ஜெட் மூலம் நாட்டை அரசு தவறாக வழிநடத்தியுள்ளது. செல்லும் திசை அறியாத பட்ஜெட் இது” என்றார்.

ரயில்கள் இணைப்பில் கவனம் செலுத்தவில்லை: நிதிஷ்குமார் புகார்

பிஹார் முதல்வரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான நிதிஷ் குமார் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரயில்வே துறையின் தற் போதைய நிலை மோசமாக உள்ளது. அதை மேம்படுத்துவதற் கான எந்தவொரு அறிகுறியும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ரயில்வே துறையின் வருமானத் துக்கு சரக்கு ரயில் போக்குவரத்து தான் முதுகெலும்பு.

அந்த துறை யிலும் முன்னேற்றம் ஏற்படுத்து வதற்கான அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லை. வெறும் அழகு சார்ந்த மாற்றங்களை தவிர, வேறு எந்த உருப்படியான அறிவிப்பு களும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. நாடு முழுவதும் ரயில் களை இணைப்பதிலும், மக்களை சென்றடையும் அம்சங்களிலும் கவனம் செலுத்தப்படவில்லை. இந்த பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்

புதிய அம்சங்கள் இல்லை: பவன்குமார் பன்சால் பாய்ச்சல்

மத்திய ரயில்வே பட்ஜெட்டில் பயோ கழிவறையை தவிர புதிதாக எதுவுமில்லை. இந்த திட்டமும் வெற்றி பெறுமா என்பதும் சந்தேகம் தான் என முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சண்டிகரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘பயோ கழிவறையை தவிர ரயில்வே பட்ஜெட்டில் புதிதாக எந்த அம்சமும் இடம் பெறவில்லை.

இந்த திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதையும் கணிக்க முடியவில்லை. இந்த கழிவறைகள் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாவிட்டால் ஆபத்தாக முடியவும் வாய்ப்பு உள்ளது.

மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது அறிவிக்கப்பட்ட அதே பழைய திட்டங்களை தான், தற்போதைய பட்ஜெட்டில் பாஜக அரசு அறிவித்துள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x