Published : 21 Aug 2021 10:18 PM
Last Updated : 21 Aug 2021 10:18 PM

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மறைவு

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங் மறைந்தார். அவருக்கு வயது 89.

கடந்த ஜூலை மாதம் அவருக்கு உடல்நிலைக் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஜூலை 4ஆம் தேதி முதல் அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரகக் கோளாறு, இதயக்கோளாறு, நரம்பியல் பிரச்சினை இருந்தது. இதனால் அவருக்கு பல்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். செப்சிஸ் மற்றும் பல்வேறு உள் உறுப்பு செயலிழப்பால் அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

யார் இந்த கல்யாண் சிங்?

கல்யாண் சிங் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1992 வரையிலும், 1997 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை உத்தரப் பிரதேச மாநில முதல்வராக இருந்தார்.

அவருடைய ஆட்சிக் காலத்தில் தான் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. டிசம்பர் 26, 1992ல் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கல்யாண் சிங் ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார்.

கல்யாண் சிங் மறைவுக்கு பாஜக பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x