Published : 09 Aug 2021 03:17 PM
Last Updated : 09 Aug 2021 03:17 PM

2022-ம் ஆண்டு பத்ம விருது; செப்டம்பர் 15-ம் தேதி வரை பரிந்துரை அனுப்பலாம்

2022-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை அனுப்பலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

2022ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகள் (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ) விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல், பரிந்துரைகள் அனுப்புதல் தற்போது நடைப்பெறுகிறது.

பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க, 2021 செப்டம்பர் 15ம் தேதி கடைசி தேதி. பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பரிந்துரைகள், பத்ம விருது இணையதளத்தில் https://padmaawards.gov.in ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும்.

பத்ம விருதுகளை, மக்கள் பத்ம விருதுகளாக மாற்ற மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

இதனால் சிறப்பாக செயல் புரிந்தவர்கள், பெண்கள், பட்டியலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்துக்கு தன்னலமற்ற சேவை செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கும்படி அனைத்து மக்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் பத்ம விருதுகள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஏற்றபடி இருக்க வேண்டும். மேற்கோள்கள் கதை வடிவத்தில் அதிகபட்சம் 800 வார்த்தைகளில் இருக்க வேண்டும். அவை, அந்தந்த துறையில் சாதனை புரிந்த, சேவையாற்றிய நபரின் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகளை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

இது தொடர்பான மேலும் விவரங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.mha.gov.in) ‘விருதுகள் மற்றும் பதக்கங்கள்’ என்ற தலைப்பில் கீழ் உள்ளன. இந்த விருதுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள், பத்ம விருதுகள் இணையதளத்தில் கீழ்கண்ட இணைப்பில் உள்ளன. https://padmaawards.gov.in/AboutAwards.aspx

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x