Last Updated : 08 Aug, 2021 03:17 AM

 

Published : 08 Aug 2021 03:17 AM
Last Updated : 08 Aug 2021 03:17 AM

உ.பி.யில் அமெரிக்க பல்கலைக்கழக கிளைகள்: துணை முதல்வர் தினேஷ் சர்மாவுடன் அமெரிக்க குழு ஆலோசனை

உத்தரப் பிரதேசத்தில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் கிளைகளை அமைப்பது தொடர்பாக மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மாவுடன் நேற்று அமெரிக்க குழுவினர் ஆலோசனை செய்தனர்.

இந்தியாவின் மத்தியப் பல்கலைக்கழகங்களின் கிளைகளை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மற்ற பகுதிகளில் அமைக்க முடிவு செய்தது. இத்திட்டத்தின் கீழ் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மட்டும் தனது கிளைகளை மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத், பிஹாரின் கிஷண்கன்ச் மற்றும் கேரளாவின் மலப்புரம் ஆகிய இடங்களில் அமைத்தது. டெல்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் எதிர்ப்பு கிளம்பியதால் கிளைகள் அமைக்க முடியவில்லை.

இந்நிலையில் பிரதமர் மோடிஅரசு, புதிய கல்விக் கொள்கையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகளை இந்தியாவில் அமைக்க அனுமதி அளித்துள்ளது. அதன் படி நாட்டிலேயேமுதல் முறையாக பாஜக ஆளும்உ.பி.யில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் கிளைகள் அமையஉள்ளன. இதற்காக, அமெரிக்காவின் வட மாகாணங்களின் அரசுமற்றும் தனியார் பல்கலைக்கழகங் களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதை ஏற்ற அமெரிக்க அரசின் 5 பேர் கொண்ட குழு, சமீபத்தில் உ.பி.யில் சுற்றுப்பயணம் மேற் கொண்டது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வட மாநிலஅலுவலக இயக்குநர் இக்குழுவுக்கு தலைமை ஏற்றி ருந்தார். இவர்களுடன் உ.பி. துணை முதல்வர் தினேஷ் சர்மா நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து, அமெரிக்கக் குழுவின் சார்பில் திட்ட அறிக்கை ஒன்று துணை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில்,அமெரிக்காவின் சில பல்கலைக் கழகங்களின் கிளைகளை உத்தர பிரதேசத்தில் அமைக்க விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நொய்டா மற்றும் ஆக்ரா நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை டெல்லிக்கு மிக அருகில் இருப்பதால், அந்நகரங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த பரிந்துரைகளை உ.பி.ஏற்ற பின்னர், மாநில பாஜகஅரசு - அமெரிக்க பல்கலைக் கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். மேலும்,உ.பி.யின் தெய்வீக நகரங்கள் அயோத்தி, காசி, மதுரா மற்றும்வாரணாசி ஆகிய மாவட்டங்களில் அமெரிக்காவுடன் இணைந்து தொழில் தொடங்கவும் ஆலோசிக் கப்பட்டது. இதற்காகவும், அமெரிக்க தரப்பில் அந்த மாவட்டங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத் தக் கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் மாநில உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘உ.பி.யில் குறிப்பாக சட்டம் ஒழுங்கை மேம்படுத்தவும், சாலை வசதிகளை ஒழுங்குபடுத்தவும் அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த மேம்படுத்தலுக்கு பிறகுஅமெரிக்கப் பல்கலைக்கழகங் களின் கிளைகள் இங்கு அமைக் கப்படும். இந்த திட்டம், கடந்த காலங்களில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற போது வித்திடப்பட்டவை’’ என்றனர்.

அடுத்த ஆண்டு உ.பி.யில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலையும் மனதில் வைத்து இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் விரைவுபடுத்தப்படுவதாகக் கூறப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x