Last Updated : 02 Feb, 2016 03:19 PM

 

Published : 02 Feb 2016 03:19 PM
Last Updated : 02 Feb 2016 03:19 PM

இந்து கடவுள் ராமர் மீதான வழக்கு தள்ளுபடி

சீதையை வனவாசம் அனுப்பியதாக இந்துக் கடவுள் ராமர், அவரது தம்பி லக்‌ஷ்மணன் மீது தொடரப்பட்ட வழக்கை பிஹார் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சீதையை வனவாசத்துக்கு அனுப்பியதாக ராமர், லக்‌ஷ்மணன் மீது பிஹார் மாநிலம் சீதாமாரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சந்திர குமார் சிங் என்ற வழக்கறிஞர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், சீத்தாமாரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ராஷ் பிஹாரி வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இந்த வழக்கு உண்மைக்கு அப்பாற்பட்டிருப்பதாகக் கூறி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

புராணத்தின் அடிப்படையில் சீதை சீதாமாரியில் பிறக்கவில்லை என மனுதாரருக்கு நீதிபதி சுட்டிக்காட்டினார். இதுபோன்று பல்வேறு தர்க்கப் பிழைகள் மனுவில் இருப்பதாக நீதிபதி கூறினார்.

எனவே, அடிப்படை உண்மைகள் கூட இல்லாத வழக்கை மனுதாரர் தாக்கல் செய்துள்ளதாக அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக அவர் கூறினார்.

ராமர், லக்‌ஷமணன் மீது வழக்கு தொடர்ந்ததற்காக சந்திர சிங் குமாருக்கு எதிராக நீதிமன்றத்தில் 3 அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து அமைப்புகள் மிரட்டல்:

இந்நிலையில், இந்துக் கடவுள்கள் ராமர், அவரது தம்பி லக்‌ஷ்மணன் மீது வழக்கு தொடர்ந்ததற்காக இந்து அமைப்புகள் சில தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகக் சந்திர குமார் சிங் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x