

புதுடெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாநில வாக்காளர் பட்டியலில் புதிதாக சுமார் 7 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களில், சுமார் 3.22 லட்சம் பேர் முதற்கட்டத் தேர்தலிலும், 3.88 லட்சம் பேர் இரண்டாம் கட்டத் தேர்தலிலும் வாக்களிக்க உள்ளனர். எனினும், இவர்களில் முதல்முறை வாக்களிக்கும் 18 வயது இளைஞர்கள் எத்தனை பேர் மற்றும் பாலின வாரியான விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.