ஜார்க்​கண்ட்டில் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் நொறுங்கி 7 பேர் உயிரிழப்பு - ரூ.7 லட்சம் கடன் வாங்கிச் சென்றபோது பரிதாபம்

ஜார்க்​கண்ட்டில் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் நொறுங்கி 7 பேர் உயிரிழப்பு - ரூ.7 லட்சம் கடன் வாங்கிச் சென்றபோது பரிதாபம்
Updated on
1 min read

ராஞ்சி: ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் ஒரு​வரை காப்​பாற்ற ஏர் ஆம்புலன்​ஸில் சென்றபோது விபத்து ஏற்​பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜார்க்​கண்ட் மாநிலத்​தைச் சேர்ந்​தவர் சஞ்​சய் குமார் ஷா. இவர் லதேஹர் மாவட்​டத்​தின் சந்த்வா பகு​தி​யில் நடத்தி வந்த ஓட்​டல் மிக​வும் பிரபல​மானது. கடந்த திங்​கட்​கிழமை இவரது ஓட்​டலில் திடீரென தீப்​பற்​றியது. இந்​நிலை​யில், தீயில் சஞ்​சய் குமார் ஷா படு​கா​யம் அடைந்​தார். உடலில் 65 % தீக்​கா​யங்​களு​டன் ராஞ்சியில் உள்ள தனி​யார்​ மருத்​து​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அவரை உடனடி​யாக டெல்​லி​யில் உள்ள ஸ்ரீகங்​கா​ராம் மருத்துவமனைக்கு கொண்டு செல்​லுங்​கள் என்று மருத்​து​வர்​கள் அறி​வுறுத்தி உள்​ளனர்.

அதன்​படி, சஞ்​சய் குமார் ஷாவை டெல்லி மருத்​து​வ​மனைக்கு அழைத்து செல்ல முடி​வெடுத்​தனர். சாலை வழி​யாக சென்​றால் பல மணி நேர​மாகும். அதனால் ரெட்​ பேர்ட் ஏர்​வேஸ் நிறு​வனம் இயக்​கும் பீச் கிராப்ட் சி 90 என்ற சிறியரக ஆம்​புலன்ஸ் விமானத்தை வாடகைக்கு ஏற்​பாடு செய்​தனர். ஆம்​புலன்ஸ் விமானக் கட்​ட​ணம், சிகிச்​சைக்கு லட்​சக்​கணக்​கில் செல​வாகும் என்று கூறி​யுள்​ளனர்.

இதையடுத்து வீடு, நிலம் ஆகிய​வற்றை சஞ்​சய் குடும்​பத்​தார் விற்​றுள்​ளனர். அப்​படி​யும் பணம் போத​வில்​லை. வெளி​யில் ரூ.7 லட்சம் கடன் வாங்​கி​யுள்​ளனர். பின்​னர் திங்​கட்​கிழமை இரவு 7.11 மணிக்கு ஆம்​புலன்ஸ் விமானம் இரவு 7.11 மணிக்கு டெல்லி புறப்பட்​டது. ஆனால், 20 நிமிடங்​களில் அந்த ஆம்​புலன்ஸ் விமானம் தகவல் கட்​டுப்​பாட்டு அறை​யுட​னான தொடர்பு இல்லாமல் போனது.

தகவல் அறிந்து மீட்​புப் படை​யினர் தேடு​தல் வேட்​டை​யில் ஈடுபட்டனர். அப்​போது சத்ரா மாவட்​டத்​தில் உள்ள அடர்ந்த வனப்பகு​தி​யில் ஆம்​புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இந்த விபத்​தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயி​ரிழந்​தனர். ஒரு​வரை காப்​பாற்ற சென்று 7 பேர் உயி​ரிழந்த சம்​பவம் சோகத்தை ஏற்​படுத்தி உள்​ளது.

ஜார்க்​கண்ட்டில் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் நொறுங்கி 7 பேர் உயிரிழப்பு - ரூ.7 லட்சம் கடன் வாங்கிச் சென்றபோது பரிதாபம்
தனித்து விடப்பட்ட தவெக: அதீத நம்பிக்கையில் இருக்கிறாரா விஜய்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in