Published : 16 Feb 2016 07:57 AM
Last Updated : 16 Feb 2016 07:57 AM

இலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினைக்காக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை இல்லை: இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர திட்டவட்டம்

இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச் சினைக்காக இந்திய அரசுடனேயே பேச்சுவார்த்தை நடத்துவோம். தமிழக அரசுடன் பேச்சுவார்த் தைக்கு இடமில்லை என இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்தியா- இலங்கை கூட்டுக் குழுவின் 9-வது மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக கடந்த வாரம் கொழும்பு சென்றார். அப்போது இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்து வதற்காக இந்தியா வருமாறு இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரவை அழைத்தார்.

இது குறித்து அமைச்சர் மகிந்த அமரவீர கொழும்பில் ஞாயிற்றுக் கிழமை மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட இழுவைப் படகு களை பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து வருகின்றனர். இதனால் இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு உள்ளிட்ட பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. இதனால், இலங்கை கடற் படையினருக்கு எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்து அவர்களின் படகு கள், வலைகளை பறிமுதல் செய்யு மாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் அச்சுறுத்த லுக்கு இலங்கை அரசு பயப்படாது. பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் திரும்ப அளிக்கப்படமாட்டாது. ஆனால், மீனவர்களை மனிதா பிமானத்துடன் விரைவில் விடு தலை செய்வோம்.

இந்திய-இலங்கை மீனவ பேச்சு வார்த்தை குறித்து இந்திய அரசுட னேயே பேச்சுவார்த்தை நடத்து வோம். தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை என்ற பேச்சுக்கே இட மில்லை எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x