Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM

லங்டா, காகோரி உள்ளிட்ட சுவையான மாம்பழங்களை பிரதமர் மோடிக்கு அனுப்பிய முதல்வர் ஆதித்யநாத்

லக்னோ

உத்தர பிரதேசத்தின் லங்டா, காகோரி உள்ளிட்ட சுவையான மாம்பழங்களை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுப்பி வைத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் மே 3-வதுவாரம் தொடங்கி ஆகஸ்ட் வரைமாம்பழ சீசன் நீடிக்கும். அந்த மாநிலத்தின் தசேரி, சவுதா, லங்டா, காகோரி உள்ளிட்டமாம்பழ வகைகள் சுவை மிகுந்தவை. இந்த மாம்பழங்களை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுப்பி வைத்துள்ளார்.

ஒவ்வொரு மாம்பழ பெட்டியிலும் முதல்வரின் வாழ்த்து கடிதமும் வைக்கப்பட்டிருக்கிறது. ‘‘உ.பி.யின் தசேரி உள்ளிட்ட பல்வேறு மாம்பழ வகைகள் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளன. இந்த மாம்பழங்களின் சுவையும் இனிப்பும் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்’’ என்று கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, ‘‘எனக்கு லங்டா வகை மாம்பழங்களை முதல்வர் யோகி அனுப்பி உள்ளார். அவ ருக்கு நன்றி’’ என்றார்.

பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கும் யோகி ஆதித்யநாத் மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுக்கு மாம்பழங்கள் அனுப்பவில்லை.

ராகுலுக்கு மாம்பழம் பிடிக்காது

இதுகுறித்து மாநில அரசு வட்டாரத்தினர் கூறும்போது, ‘‘காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், உத்தர பிரதேச மாம்பழங்கள் எனக்கு பிடிக்காது என்று ராகுல் கூறியுள்ளார். அவருக்கும் எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங் களின் முதல்வர்களுக்கும் உத்தர பிரதேசமாம்பழங்கள் பிடிக்காது. எனவே அவர்களுக்கு மாம்பழங்களை அனுப்பவில்லை’’ என்று தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x