Published : 22 Jul 2021 02:52 PM
Last Updated : 22 Jul 2021 02:52 PM

எரிபொருள் இல்லாமல் நடுக்கடலில் சிக்கிய கப்பல்: 12 பணியாளர்களை மீட்ட கடலோர காவல்படை

மும்பை

குஜராத்தின் உமர்காமில் எரிபொருள் இல்லாமல் நடுக்கடலில் மோசமான வானிலையில் சிக்கித் தவித்த மோட்டர் கப்பலில் இருந்து 12 பணியாளர்களை கடலோரா காவல்படையினர் பத்திரிமாக மீட்டனர். மேலும் சில ஐ.சி.ஜி கப்பல்கள் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

குஜராத்தின் உமர்காமில் சீரற்ற வானிலைக்கு மத்தியில் எரிபொருள் இல்லாததால் எம்.வி.கஞ்சன் கப்பல் சிக்கித் தவித்தது. மும்பை கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (எம்.ஆர்.சி.சி), எம்.வி. காஞ்சன் கப்பல் எரிபொருள் மாசுபாட்டால் சிக்கித் தவிக்கிறது என்றும் இதனால் எஞ்சின் செயல்படவில்லை என்றும் சீரற்ற வானிலைக்கு மத்தியில் மின்சாரமும் இல்லை என்றும் மும்பை டி.ஜி தொடர்பு மையத்திலிருந்து தகவல் வந்தது.

அன்று மாலை, கப்பலின் மாஸ்டர், எஃகு சுருள்களை ஏற்றி வந்த எம்.வி. கஞ்சன், நங்கூரத்தை கைவிட்டு, ஸ்டார்போர்டு (வலது) பக்கமாக சாய்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

எம்.ஆர்.சி.சி மும்பை உடனடியாக சர்வதேச பாதுகாப்பு வலையை (ஐ.எஸ்.என்) செயல்படுத்தியது, எம்.வி. ஹெர்மீஸ் கப்பல் உடனடியாக சிக்கலிருக்கும் கப்பலை நோக்கித் திருப்பப்பட்டது. கடல் கொந்தளிப்பாக இருக்கும் சூழலிலும், எம்.வி.ஹெர்மீஸ் துணிந்து செயல்பட்டு, எம்.வி. காஞ்சனின் 12 பணியாளர்களையும் இரவோடு இரவாக மீட்டது.

சிக்கித் தவிக்கும் கப்பலுக்கு உதவுவதற்காக அவசர தோண்டும் கப்பல் (ஈ.டி.வி) வாட்டர் லில்லி அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x