Last Updated : 12 Feb, 2016 04:39 PM

 

Published : 12 Feb 2016 04:39 PM
Last Updated : 12 Feb 2016 04:39 PM

சித்திவிநாயகர் ஆலயத்தைத் தாக்க வேண்டாம் என்று லஷ்கரை எச்சரித்தேன்: ஹெட்லி

சிறப்பு நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்கு மூலம் அளித்து வரும் பாகிஸ்தானிய-அமெரிக்க பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லி, சித்திவிநாயகர் ஆலயத்தை தாக்க வேண்டாம் என்று லஷ்கர் அமைப்பை எச்சரித்ததாக இன்று வாக்குமூலம் அளித்தார்.

"சித்தி விநாயகர் ஆலயம், கடற்படை ஏர் ஸ்டேஷன் மீது தாக்குதல் நடத்துவதை நான் ஊக்குவிக்கவில்லை. காரணம் அங்கு பாதுகாப்பு வலுவாக உள்ளது என்று லஷ்கர் தீவிரவாதிகளை எச்சரித்தேன்" என்று நீதிபதி ஜி.ஏ.சனப் முன்னிலையில் தெரிவித்தார்.

மேலும் நவம்பர் 2008 தாக்குதலில் மும்பை விமான நிலையம் தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப் படாதது குறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் இக்பால் கடும் ஏமாற்றம் அடைந்ததாகவும் ஹெட்லி குறிப்பிட்டார்.

அதே போல் சிவசேனா பவனை தான் பார்வையிட வேண்டும் என்று விரும்பியதாகவும், ஏனெனில் லஷ்கர் அந்தக் கட்டிடத்தை தாக்க விரும்புவார்கள் என்றும் அதன் தலைவரைத் தீர்த்துக் கட்டவும் லஷ்கர் விரும்பும் என்றும் தான் கருதிதாக தெரிவித்த ஹெட்லி, லஷ்கர் பயங்கரவாதத் தாக்குதலைக் கையாண்ட சாஜித் மிர், உத்தவ் தாக்கரேயின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொண்டால் அங்கு நுழையலாம் எனவே உத்தவ்வுடன் நல்ல உறவுமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு தன்னை அறிவுறுத்தியதாகவும் கூறினார்.

மேலும், இதனையடுத்து தான் சிவசேனா பவனுக்கு தான் 2, 3 முறை வந்து அதன் உட்புறம், வெளிப்புறங்களை வீடியோ பிடித்து மிர்ரிடமோ அல்லது மேஜர் இக்பாலிடமோ கொடுத்தேன் சரியாக நினைவில்லை என்றார்.

பிரிகேட் 313-ல் பணியாற்றிய அல்-கய்தா தீவிரவாதி இலியாஸ் கஷ்மீரி, ஹெட்லி இந்தியா வருவதற்கு பண உதவி செய்ததாகவும், பிறகு டெல்லியில் உள்ள தேசிய ராணுவ கல்லூரிக்கு சென்று அதனைப் பார்வையிட்டதாகவும் ஹெட்லி தெரிவித்தார்.

மேலும் பாகிஸ்தானிய ராணுவத்தில் பணியாற்றிவிட்டு அல்-கய்தாவில் இணைந்த மேஜர் பாஷா என்பவர் ஹெட்லியிடம் அவர் செல்ல வேண்டிய இடங்களின் பட்டியலை வழங்கியுள்ளார். தேசிய ராணுவ கல்லூரியை தாக்குவது சிறந்தது ஏனெனில் அது மதிப்பு வாய்ந்த இடம் என்றும், மூத்த ராணுவ அதிகாரிகள் இருக்கும் இடம் என்றும் அவர் ஹெட்லியிடம் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை வெற்றி பெற்றால், பாகிஸ்தானுடன் போரில் மாண்ட ராணுவ அதிகாரிகளை விட அதிக ராணுவ அதிகாரிகளை தீர்த்துக் கட்டலாம் என்றும் மேஜர் பாஷா ஹெட்லியிடம் தெரிவித்ததாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x