Published : 12 Jul 2021 03:12 AM
Last Updated : 12 Jul 2021 03:12 AM

முதல் குறைதீர்ப்பு அறிக்கையை வெளியிட்டது ட்விட்டர்: இந்திய குறைதீர்ப்பு அதிகாரி நியமனம்

புதுடெல்லி

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிகளின்படி ட்விட்டர் நிறுவனம் இந்தியப் பிரிவு குறை தீர்ப்பு அதிகாரியாக வினய் பிரகாஷ் என்பவரை நியமித்துள்ளது. இதுபோல முதல் குறைதீர்ப்பு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

புதிய ஐடி விதிகளைப் பின்பற்றுவது தொடர்பாக முன்னாள் மத்திய ஐ.டி. துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையே மோதல் இருந்துவந்த நிலையில், புதிய அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் நியமிக்கப்பட்டார். இவரும் அரசின் விதிகளை பின்பற்றாத ட்விட்டர் நிறுவனத்துக்கு கண்டனம் தெரி வித்தார்.

முன்னதாக குறைதீர்ப்பு அதிகாரியாக தர்மேந்திர சாதுர் என்பவர் நியமிக்கப்பட்டார். ஆனால் நியமனம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே திடீரென அவர் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம், அதன் சர்வதேசசட்டக் கொள்கை இயக்குநரும் அமெரிக்காவைச் சேர்ந்தவருமான ஜெர்மி கேசல் என்பவரை இந்தியக் குறைதீர்ப்பு அதிகாரியாக தற்காலிகமாக நியமித்தது. ஆனால் விதிகளின்படி இந்தியக் குடிமகனை இந்தப் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்பதால் இந்தநியமனம் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. இதற்கிடையில் ட்விட்டர்நிறுவனம் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட் டது. இந்த வழக்கில் பதிலளித்த ட்விட்டர் நிறுவனம் ‘முழு நேர குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க 8 வாரங்கள் அவகாசம் தேவை என்றும், குறைதீர்ப்பு குறித்த முதல்கட்டஅறிக்கையை ஜூலை 11-ம் தேதிசமர்ப்பிப்போம் என்றும் தெரிவித் திருந்தது.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் புதிய விதிகளுக்கு இணங்கி செயல்படத் தொடங்கியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த வினய் பிரகாஷ் என்பவரை குறைதீர்ப்பு அதிகாரியாக நேற்று நியமித்தது. அவரது முகவரி, மின்னஞ்சல் முகவரி போன்றவற்றையும் வெளியிட்டுள்ளது.

இவர் பயனாளர்களின் புகாரை24 மணி நேரத்துக்குள் ஏற்று, அதன் மீது அடுத்த 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாரைப் பெற்றதற்கான ஒப்புகையை புகார் அளித்தவருக்கு இவர் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி தனது முதல் குறைதீர்ப்பு அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது. புதிய ஐடி விதிகளின்படி மே 25 முதல் ஜூன் 26 வரையிலான காலத்தில் ட்விட்டர் நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கைகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

22 ஆயிரம் கணக்கு முடக்கம்

அந்த அறிக்கையில், ‘‘தனிநபர் பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக 133 பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் பிற நபர்களின் சம்மதமில்லாமல் பதிவேற்றப்படும் நிர்வாணப் பதிவுகள் தொடர்பாக இதுவரை 18,385 கணக்கு கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும்தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் இருந்த 4,179 கணக்குகள்முடக்கப்பட்டுள்ளன’’ என குறிப் பிடப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x