Published : 11 Jul 2021 03:13 AM
Last Updated : 11 Jul 2021 03:13 AM

லவ் ஜிகாத் வழக்கில் ஒடிசா, காஷ்மீர் அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி

லவ் ஜிகாத் வழக்கில் ஒடிசா, காஷ்மீர் அரசுகளுக்கும் சண்டிகர் நிர்வாகத்துக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒடிசாவை சேர்ந்த கபிதா, கேதர்நாத் தம்பதியினர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய் துள்ள ஆட்கொணர்வு மனு வில் கூறியிருப்பதாவது:

எங்கள் மகள் பி.பார்ம் படித்து வந்தார். அவளோடு, காஷ்மீரை சேர்ந்த ஒருவரும் படித்தார். எனது மகளை ஏமாற்றி முதலில் லக்னோவுக்கும் பின்னர் சண்டிகருக்கும் காஷ்மீர் இளைஞர் அழைத்துச் சென்றார். பின்னர் எங்கள் மகளை திருமணம் செய்து காஷ்மீரின் பண்டிப்போராவில் தலைமறைவாக உள்ளார்.

நாங்கள் கலப்பு திருமணத் துக்கு எதிரானவர்கள் கிடையாது. எங்கள் மகள் விரும்பும் எந்த மதத்தை சேர்ந்த இளைஞரையும் திருமணம் செய்ய நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஆனால் லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களை தீவிரவாத பாதைக்கு அழைத்துச் செல்வதால் அச்சமடைந் துள்ளோம். அவளது உயிருக்கு ஆபத்து உள்ளதால் அவளை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் யு.யு.லலித், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு குறித்து உரிய பதில் அளிக்குமாறு ஒடிசா, ஜம்மு-காஷ்மீர் அரசுகள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசம் ஆகிய அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x