Published : 09 Jul 2021 03:13 AM
Last Updated : 09 Jul 2021 03:13 AM

கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க கவனம் செலுத்துவேன்: பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் உறுதி

மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஹர்தீப் சிங் புரிக்கு பெட்ரோலியத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் தனது துறை அமைச்சகத்தில் ஹர்தீப் சிங் புரி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

உலகம் முழுவதும் எரிசக்தி தொடர்பாக தொழில்நுட்பங்களும் கொள்கைகளும் மாறி வருகின்றன. அதற்கேற்ப இந்தியாவும் எரிசக்தி துறையில் மாற்றங்களை செய்ய வேண்டியதற்கான நேரம் வந்துவிட்டது. எரிசக்தி துறையில் மாற்றம் நாட்டுக்கு கவர்ச்சிகரமான வாய்ப்புக்களை அளிக்கும். இந்தியா சுயசார்புடையதாக மாற வேண்டும் என்ற தொலைநோக்கு கொள்கையோடு பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். அவரது தொலைநோக்கு பார்வையுடன் உள்நாட்டில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க கவனம் செலுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x