Published : 06 Jul 2021 03:12 AM
Last Updated : 06 Jul 2021 03:12 AM

‘கோ-வின்’ டிஜிட்டல் தளத்தை பயன்படுத்த 50 நாடுகள் ஆர்வம்; இந்தியாவின் தொழில்நுட்பத்தை உலக நாடுகளுடன் பகிர்வோம்: சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

மத்திய சுகாதாரத் துறை, வெளியுறவுத் துறை சார்பில் 'கோ வின் சர்வதேச மாநாடு' காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.படம்: பிடிஐ

புதுடெல்லி

‘கோ-வின்’ டிஜிட்டல் தளம், ஆரோக் கிய சேது செயலி தொடர்பான இந்தியாவின் தொழில்நுட்பத்தை அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்து கொள்வோம் என்றும் பிரதமர் நரேந் திர மோடி உறுதி அளித்துள்ளார்.

கரோனா வைரஸுக்கு எதிராக எந்த நாடும் தனித்துப் போரிட முடி யாது. இந்த இக்கட்டான நேரத்தில் 'ஒரே பூமி, ஒரே நலவாழ்வு' அணுகு முறையை பின்பற்றினால் கரோனா பெருந்தொற்றில் இருந்து மீள முடியும் என்றும் அவர் தெரிவித் துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா வைரஸ் பரவத் தொடங் கியது. அதற்கு அடுத்த மாதத்தில் ஆரோக்கிய சேது செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. வைரஸ் தொடர்பான அனைத்து தகவல்களும் இந்த செயலியில் இடம்பெற்றன. அத்துடன் வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்டவர்கள் அருகில் வந்தால் இந்த செயலி எச்சரிக்கை செய்தது. இதன்மூலம் வைரஸ் பரவல் ஓரள வுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

உதவி கோரும் 50 நாடுகள்

நாடுமுழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது ‘கோ-வின்’ செயலி, ‘கோ-வின்’ இணையதளம் அறிமுகம் செய்யப் பட்டன. கோ-வின் செயலி மூலம் நிர்வாக பணியும், கோ-வின் இணைய தளம் மூலம் தடுப்பூசி முன்பதிவும் மேற்கொள்ளப்பட்டன. ஆரோக்கிய சேது செயலியிலும் தடுப்பூசி முன் பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இணைய வசதி இல்லாத ஏழை மக்களின் நலன் கருதி, அவர்கள் நேரடியாக அருகில் உள்ள தடுப்பூசி முகாமுக்கு சென்று தடுப்பூசி போட் டுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியாவின் தொழில்நுட்பத் திறன், வியூகத்தை உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகின்றன. இதே போன்ற டிஜிட்டல் தளங்களை உரு வாக்கித் தருமாறு கனடா, மெக்ஸிகோ, பனாமா, நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிடம் உதவி கோரியுள்ளன.

இந்தியாவின் அனுபவங்கள்

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை மற்றும் வெளியுறவுத் துறை சார்பில் ‘கோ-வின் சர்வதேச மாநாடு’ காணொலி வாயிலாக நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் ஏராளமானோர் உயிரிழந் துள்ளனர். அவர்களின் குடும்பங் களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறேன். கடந்த 100 ஆண்டுகளில் இதுபோன்ற பெருந் தொற்றை நாம் சந்திக்கவில்லை. கரோனா வைரஸுக்கு எதிராக எந்தவொரு நாடும் தனித்துப் போரிட முடியாது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறோம்.

இந்த இக்கட்டான நேரத்தில் மனித குலத்தின் நன்மைக்காக ஒட்டுமொத்த உலகமும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வைரஸ் பரவலை தடுப்பதில் எந்த நாட்டில் மிகச் சிறந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதோ, அதை அனைத்து நாடுகளும் பின்பற்றலாம்.

கரோனா வைரஸ் பரவலின் தொடக்க காலம் முதல் இந்தியாவின் அனுபவங்கள், நிபுணத்துவத்தை அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்து வருகிறோம். மருத்துவ, தொழில்நுட்ப ரீதியாக எங்களால் முடிந்தவரை உலக நாடுகளுக்கு உதவி செய்து வருகிறோம்.

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் தொழில்நுட்பம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. வைரஸ் பரவலை தடுக்க முதலில் ஆரோக்கிய சேது செயலியை அறிமுகம் செய்தோம். இந்த செயலியை 20 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.

மனிதகுல நம்பிக்கை தடுப்பூசி

மிக குறுகிய காலத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கரோனா வைரஸுக்கு எதிரான போரில் மனித குலத்தின் நம்பிக்கையாக தடுப்பூசி இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் திட் டத்தை தொடங்கினோம். இந்த திட்டத்தை முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கி உள்ளோம்.

இந்தியாவில் மக்கள்தொகை அதி கம். எங்கு, எப்போது தடுப்பூசி போடப் படும், எவ்வளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது, யாருக்கெல்லாம் தடுப்பூசி போடப்பட்டிருக்கிது என்பன உள் ளிட்ட அனைத்து தகவல்களையும் ஒன்றிணைக்கும் வகையில் எங்களது ‘கோ-வின்’ டிஜிட்டல் தளம் செயல்படுகிறது. எங்கே, யாரால் தடுப்பூசி போடப்பட்டது என்ற விவரங்கள் அடங்கிய சான்றிதழ் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்தியாவில் விநியோகம் செய்யப் படும் ஒவ்வொரு டோஸ் தடுப் பூசியையும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கிறோம். இதன்மூலம் தடுப்பூசிகள் வீணாவது தடுக்கப் படுகிறது. தடுப்பூசி திட்டத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்து நிலைகளிலும் டிஜிட்டல் அணுகு முறையை கடைபிடித்து வருகிறோம்.

உலகம் ஒரு குடும்பம்

இந்தியாவில் இதுவரை 35 கோடிக் கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பயனாளி களுக்கு செலுத்தப்பட்டிருக்கின்றன. அண்மையில் ஒரே நாளில் 90 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைத்தோம். எங்களது தொழில்நுட்பத்தை அனைத்து நாடு களுடனும் பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளோம். அதற்கு முதல்படியாகவே இந்த மாநாடு நடக்கிறது. எந்த நாட்டுக்கும் ஏற்ற வகையில் ‘கோ-வின்’ டிஜிட்டல் தளத்தை வடிவமைத்துக் கொள்ள முடியும். இந்தியாவின் தொழில்நுட்பம் விரைவில் பல்வேறு நாடுகளில் அமலுக்கு வரும்.

உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுவது இந்தியாவின் பண்பாடு. இப்போது ‘ஒரே பூமி, ஒரே நலவாழ்வு’ என்ற கொள்கையை முன்வைக்கிறோம். இதன்மூலம் கரோனா பெருந்தொற்றில் இருந்து மனித குலம் மீண்டு எழ முடியும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசும்போது, ‘‘மாநாட்டில் 142 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டில் கடந்த 6 மாதங்களில் 35 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை பயனாளிகளுக்கு செலுத்தியுள்ளோம்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x