Published : 05 Jul 2021 09:07 AM
Last Updated : 05 Jul 2021 09:07 AM

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகிறாரா ராகுல் காந்தி?


மத்திய அமைச்சரவையில் பாஜக அரசு மாற்றம் செய்ய ஆர்வமாக இருந்து வரும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தரப்பில் எந்தவிதமான அதிகாரபூர்வத் தகவல்கள் ஏதும் இல்லை என்றாலும், பெயர் வெளியிட விரும்பாத இரு மூத்த தலைவர்கள் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவு இல்லை, மே.வங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கட்சியை வெல்ல வைக்க அவரால் முடியவில்லை. ஆதலால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு புதியவரை நியமிக்க ஆலோசித்து வருவதில் ராகுல் காந்தி பெயர் அதிகமாக அடிபடுகிறது.

ஆனால், ராகுல் காந்தி தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான பதிலும் வரவில்லை. ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இருவரும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கிறார்கள்,அதற்காக ராகுலிடம் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலாவிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டபோது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

ஒருவேளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்றால், காங்கிரஸ் தலைவர் பதவி சோனியா காந்தி குடும்பத்தைத் தவிர்த்து வேறு ஒருவருக்கு வழங்கப்படலாம்.

பெயர் வெளியிட விரும்பான காங்கிரஸ் எம்.பி. ஒருவர் கூறுகையில் “ காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியைவிட, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி கடினமானது” எனத் தெரிவி்த்தார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அலுவலக வட்டாரங்கள் கூறுகையில் “ ஆதிர்ரஞ்சன் சவுத்திரி பதவிக்காலம் முடியப்போகிறது என்பது குறித்து இதுவரை யாரும் தெரிவிக்கவில்லை. ஒருவளை காங்கிரஸ் தலைமை வேறு பொறுப்பு வழங்கினால், அதை அவர் மனநிறைவுடன் ஏற்பார் என்று ஏற்கெனவே மூத்த தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்” எனத் தெரிவிக்கின்றன.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்கக்கூடும் என்று கடந்த வாரம் தென் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் ராகுல் காந்தியுடனான சந்திப்புக்குப்பின் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் “ மறைந்த முன்னாள் குடியரசுதலைவர் பிரணாப் முகர்ஜி அளித்த ஆலோசனையில், ராகுல் காந்தியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கலாம் எனத் தெரிவித்தார். இந்த கருத்தை அப்போதே அவர் தெரிவித்தார். இந்த பதவியை ராகுல் காந்தி ஏற்றால் மிகப்பெரிய தளமாக அவருக்கு அது அமையும் ” எனத் தெரிவி்த்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x