Published : 26 Jun 2021 03:11 AM
Last Updated : 26 Jun 2021 03:11 AM

உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் அடுத்தாண்டு நாட்டுக்கு அர்ப்பணிப்பு

கொச்சி

இந்தியாவிலேயே தயாரிக்கப் படும் முதல் விமானம் தாங்கி கப் பல் என்ற பெருமையை ஐஎன்ஸ் விக்ராந்த் பெற்றுள்ளது. இந்த கப்பல் கேரள மாநிலம் கொச்சி கடற்படைத் தளத்தில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் ராஜ்நாத் சிங் பேசிய தாவது:

உள்நாட்டில் போர் விமா னத்தை வெற்றிகரமாக தயாரித்த நாம் தற்போது விமானம் ்தாங்கி கப்பலை கட்டமைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளோம்.

இந்தியா தயாரித்துள்ள முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், அடுத்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். நாடு விடு தலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவதையொட்டி இந்த கப்பல் கடற்படையில் சேர்க்கப்படும்.

சுயசார்பு இந்தியாவின் சிறந்த உதாரணமாக இந்த விமானம் தாங்கி கப்பல் இருக்கும். இந்த கப்பல் மூலம் இந்தியா கடல்சார் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும்.

நமது நாட்டிலேயே விமானம் ்தாங்கி கப்பல் தயாரிக்கப்படுவதை நேரில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் திட்டத்துக்கு முதலில் அனுமதி அளித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான். நமது கடற்படையை மிகவும் வலிமையானதாக மாற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

நேற்று நான் கர்நாடக மாநிலம் கார்வாரில் உள்ள சீபேர்ட் கடற்படை தளத்தை ஆய்வு செய்து விட்டு வந்தேன். இந்திய கடற்படையின் மிகப்பெரிய கடற் படைத் தளமாக கார்வார் சீபேர்ட் தளம் அமைந்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியிலும், அதன் அருகிலுள்ள கடற்பகுதிகளிலும் கூடுதல் வசதிகளையும், அடிப் படை வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதற்கு இந்த கடற்படைத் தளம் பேருதவி புரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மதிய விருந்து சாப்பிட்டார். இந்த விருந்தில் கடற்படை தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x