Last Updated : 13 Dec, 2015 12:55 PM

 

Published : 13 Dec 2015 12:55 PM
Last Updated : 13 Dec 2015 12:55 PM

பாஜக ‘பப்ளிக்’, காங்கிரஸ் ‘பிரைவேட் லிமிடெட்’

காங்கிரஸுக்கும் பாஜகவுக் கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உள்ளது. பாஜக ‘பப்ளிக் லிமிடெட்’ (அரசுத் துறை) நிறுவனம் போன்றது. அதன் பங்குகள் பரவலாக பொதுமக்கள் வசம் உள்ளது. காங்கிரஸ் கட்சியோ ‘பிரைவேட் லிமிடெட்’ (தனியார்) நிறுவனத்துக்கு ஒப்பானது. அதன் பங்குகள் ஒரு குடும்பத்தின் வசம் மட்டுமே உள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருக்கம் உடையது என்பதால் பாஜகவும் ஒரு வகையில் குடும்பம் போன்றதே. ஆனால் அந்த கட்சியில் வாரிசு அரசியல் பிரச்சினை இல்லை. திறமைசாலியான வெளி நபர், தனது திறமை, தகுதிகளை காட்டி இந்த நிறுவனத்தை கையகப் படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதற்கு பிரதமர் மோடியே உதாரணம்.

காங்கிரஸ் கட்சியிலோ ஒரு நபர் எவ்வளவுதான் திறமைமிக்க வராக இருந்தாலும் இரு உயர் பதவிகளில் குடும்ப உறுப்பினர் களை தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்பதே உண்மை. வெளியாட்களுக்கு நிச்சயமாக இடம் கிடையாது.

திறமை தகுதியில் பின்தங்கி இருந்தாலும் எல்லா பங்குகளும் குடும்பத்தினர் வசமே இருப்பதால் ஊழியர்கள் யாரும் குடும்ப செயல் பாடுகளையோ நடவடிக்கை களையோ கேள்வி கேட்க முடியாது.

இந்த தனித்தன்மையால்தான் காங்கிரஸ் உறுப்பினர்கள் வினோதமாக செயல்படுகிறார்கள். இதை கடந்த சில நாட்களாக கண்கூடாகப் பார்க்கிறோம். தற்போது சொத்து விவகாரத்தில் சோனியா காந்தி குடும்பம் விசாரணையை எதிர்கொண்டு நிற்கிறது.

இந்த விவகாரத்தை நீதிமன்றம் மூலமாக எதிர்கொள்வோம் என்று முதலில் சொல்லப்பட்டது. அது அறிவுபூர்வமானதாகும். இந்நிலையில் இந்த விவகாரம் முழுக்க முழுக்க அரசியல் என தடாலடியாக தனது நிலையை காங்கிரஸ் மாற்றிக் கொண்டுள்ளது. மேலும் இதற்கு காரணம் மத்திய அரசு என அதன் மீது பழியையும் போட்டுள்ளது. இந்த விவகாரம் நிச்சயமாக அரசியல் பிரச்சினை அல்ல.

இப்பிரச்சினையில் சோனியா குடும்பம் செய்துள்ளது கிரிமினல் குற்றம் இல்லை என்றாலும் முறைமை அற்றது என்பது திட்ட வட்டம். இந்த பரிவர்த்தனையில் எங்களுக்கு ஆதாயம் எதுவும் கிடையாது. சட்டத்தை மீறிய தாகவே இருந்தாலும் யாருக்கும் பணப்பயன் இல்லை என்று அவர்கள் வாதிடுகிறார்கள். அவர் களின் வாதம் நமக்கு வியப்பு தரவில்லை.

வயிற்றுப் பிழைப்புக்காக வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. நம்மைபோல வேலை தேடி அலைய வேண்டிய அவசியமும் இல்லை. வாழ்நாள் முழுவதும் அரசு பங்களாக்களில் வாழ்ந்து பழக்கப்பட்ட அவர்களுக்கு சொந்த சொத்துகளுக்கும் மற்றவற்றுக்கும் எப்படி வேறுபாடு தெரியும்.

நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்பதை கைவிட்டு அரசியல் மூலம் மோதுவது என காங்கிரஸ் கட்சி திடீரென முடிவை மாற்றிக்கொண்டது. இதற்கு காரணம் குலாம் நபி ஆசாத், அகமதுபடேல், பூபிந்தர்சிங் ஹூடா, கபில்சிபல், அபிஷேக்சிங் மனு சிங்வி ஆகியோர்தான். அவர்கள்தான் சோனியாவுக்கு இந்த ஆலோசனையை வழங்கிய வர்கள். இதை ஆங்கிலப் பத்திரிகை ஒன்று அண்மையில் அம்பலப்படுத்தியது.

அந்த நாளிதழ் செய்தியில் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ்,சாம்பிட்ரோடா ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அவர்களில் யாரும் மக்களவை உறுப்பினர்கள் இல்லை. பொதுமக்களை எதிர் கொள்ள வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை. அவர்களின் ஆலோசனை அரசியல் சார்ந்ததாக தெரியவில்லை, தனிப்பட்டதாகவே உள்ளது.

சோனியா காந்தி குடும்பத்தை காப்பாற்றுவது மட்டுமே அவர்களின் குறிக்கோளாக உள்ளது. காங்கி ரஸை காப்பாற்றுவது குறித்தோ அல்லது கட்சிக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை துடைப்பது பற்றியோ அவர்களுக்கு துளியும் அக்கறை இல்லை.

‘சொத்து (நேஷனல் ஹெரால்டு) விவகாரத்தில் சோனியா காந்தி குடும்பம் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் மோதி பார்க்க விட்டுவிடலாம், கட்சியை தள்ளி வைப்போம். அரசியலாக்க வேண்டாம்’ என்று காங்கிரஸில் உள்ளவர்கள் யாரும் வாய் திறக்கவில்லை. அப்படி யாராவது இதுபற்றி நினைத்தால்கூட அவர்கள் உடனடியாக காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இதுவும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளில் முக்கியமானது.

இதேபோன்ற புகார் பிரதமர் மோடி மீது எழுந்திருந்தால் கட்சிக்குள் எதிர்ப்பு எழாமல் இருக்காது. பிஹார் தேர்தலில் மோடியால் வெற்றி தேடித் தரமுடியாமல் போனபோது அவர் மீது கட்சியில் எதிர்ப்பு எழுந்தது. நிதி முறைகேடு குற்றச்சாட்டு எழுந்தால் தப்புவது கடினம். ஊழலை சகித்துக்கொள்வதில் பாஜக காங்கிரஸ்போல இருக்காது. அது ஊழலை விரட்டுவதில் சற்று கடுமையாகவே இருக்கும்.

தற்போதைய பிரச்சினையை அரசியலாக்க காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளதால் நாடாளுமன்றத்தை முடக்க நீதிமன்ற வழக்கை அந்த கட்சி பயன்படுத்துகிறது.

நாடாளுமன்ற முடக்கத்தின் மூலம் காங்கிரஸ் கட்சி, தான் இருப்பதை காட்டிக்கொள்கிறது. எல்லா கட்சிகளுமே இதைத்தான் செய்கின்றன. அதனால் பலனும் கிடைக்கிறது. ஆனால் ஒரு விஷயத்திலிருந்து இன் னொன்றுக்கு தாவிக்கொண்டே இருப்பது அறிவுடைமை ஆகுமா?

நாடாளுமன்றத்தில் முதல் நாள் பாஜக முதல்வர்கள், வெளியுறவு அமைச்சர் மீதான ஊழல் புகார், அடுத்த நாள் வி.கே. சிங்கின் பொறுப்பற்ற பேச்சுகள், மூன்றாவது நாள் சகிப்பின்மை விவகாரம். நான்காம் நாள் தனிப்பட்ட நீதிமன்ற வழக்கு விவகாரம், 5-வது நாள் மீண்டும் ஊழல் விவகாரம் என எழுப்பப்படுகிறது. இந்த வியூகங்களை யாரோ ஒருவர் வகுத்து அதற்கு யாரோ ஒருவர் ஒப்புதல் அளிக்கிறார் என்றே தோன்றுகிறது.

மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்படுவது அவசியம். ஆனால் அதை விடுத்து எதிர்க்கட்சி தேவையில்லாத குப்பைகளை கிளறுவது இந்தியர்களின் மிகப்பெரிய துரதிருஷ்டம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x