Published : 06 Jun 2021 03:11 AM
Last Updated : 06 Jun 2021 03:11 AM

பயோ-இ நிறுவனத்தின் தடுப்பூசி விலை ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட வாய்ப்பு

ஹைதராபாத்

பயோ-இ நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியின் விலை ரூ.250 ஆகநிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம் கார்ப்வேக்ஸ் என்ற பெயரில் கரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. 3-ம் நிலை பரிசோதனையில் உள்ள இதற்கு மத்திய அரசுவிரைவில் அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 30 கோடி டோஸ்தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்காக பயாலஜிகல்-இ நிறுவனத்துடன் மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ரூ.1,500 கோடியை முன்பணமாக அரசு வழங்க உள்ளது.

இந்நிலையில், கார்ப்வேக்ஸ் தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை ரூ.250 ஆக நிர்ணயிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ரூ.200-க்கும் குறைவாகக் கூடஇருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கரோனா தடுப்பூசி, மாநில அரசுகளுக்கு ரூ.400-க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200-க்கும் விற்கப்படுகிறது. இதுபோல புனே நகரில் உள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு முறையே ரூ.300, ரூ.600-க்கு விற்கப்படுகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி விலை இந்தியாவில் ரூ.995 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பயோ-இ நிறுவனத்தின் கார்ப்வேக்ஸின் விலை ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டால், நாட்டிலேயே விலை குறைவான கரோனா தடுப்பூசி என்ற பெருமை அதற்கு கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x