Last Updated : 09 Dec, 2015 09:03 AM

 

Published : 09 Dec 2015 09:03 AM
Last Updated : 09 Dec 2015 09:03 AM

நேஷனல் ஹெரால்டு வழக்கு விவகாரத்தில் காங். அமளியால் நாடாளுமன்றம் முடக்கம்: அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றச்சாட்டு

நேஷனல் ஹெரால்டு வழக்கு விவ காரம் தொடர்பாக மக்களவை, மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் இருஅவை களும் முடங்கின.

மக்களவை நேற்று காலை கூடியதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேஷனல் ஹெரால்டு வழக்கு விவகாரத்தை எழுப்பினர். சபாநாயகரின் மேஜையை சூழ்ந்த அவர்கள், மத்திய அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினர்.

இருக்கைக்கு திரும்பி அமைதி காக்குமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்ட பிறகும் அமளி நீடித்தது. காங்கிரஸுக்கு ஆதரவாக திரிணமூல் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை தொடங்கிய 25-வது நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மக்களவை கூடியபோது காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டனர்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் அமைதி காக்குமாறு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டிப்புடன் கூறினார். ஆனால் அமளி நீடித்தது. இதே நேரத்தில் போலாவரம் அணை பிரச்சினையை எழுப்பிய பிஜு ஜனதா தள எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதியில் கூடி கோஷமிட்ட னர். இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி பேசியபோது, அவை இதுவரை சுமுகமாக நடைபெற்று வந்தது, காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இன்று என்ன ஆனது என கேள்வி எழுப்பினார்.

சட்ட அமைச்சர் சதானந்த கவுடா பேசியபோது, காங்கிரஸார் ஜனநாயகவிரோதமாக செயல் படுகின்றனர், விவசாயிகள் நலன் தொடர்பான வறட்சி நிலவரம் குறித்து விவாதிக்காமல் அவையை முடக்குகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

பிற்பகலில் மீண்டும் அவை கூடியபோது, மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் கோஷமிட்டனர். அவையை நடத்த முடியாததால் நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை ஒத்திவைப்பு

மாநிலங்களவை கூடியதும் நேஷனல் ஹெரால்டு வழக்கு விவ காரத்தை காங்கிரஸ் எம்.பிக்கள் எழுப்பி கோஷமிட்டனர். இதனால் அவை கூடிய சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது காங்கிரஸார் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட தால் பிற்பகல் வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு அவை மீண் டும் கூடியது. ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷ மிட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

நேஷனல் ஹெரால்டு விவ காரத்தால் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக் களை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x