Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

ஆந்திராவில் 13 லாரி ஓட்டுநர்களை கொன்று சரக்குகளை கொள்ளையடித்த கும்பல்: முதல்முறையாக ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை; 7 பேருக்கு ஆயுள் சிறை- ஓங்கோல் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

ஆந்திராவில் வழிப்பறி செய்து 13 பேரை கொலை செய்த வழக்கில் கைதான முன்னாவை நேற்று ஓங்கோல் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

ஓங்கோல்

ஓட்டுநர், கிளீனர்களை அடித்துக் கொலை செய்துவிட்டு, லாரியில் உள்ள சரக்குகளை கடத்தி விற்ற கும்பலைச் சேர்ந்த 12 பேருக்கு தூக்கு தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து ஆந்திர மாநிலம் ஓங்கோல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நாட்டி லேயே முதன்முறையாக ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத் தில் உள்ளது ஓங்கோல். இங்குள்ள கொல்கத்தா - சென்னை தேசிய நெடுஞ் சாலையில் சரக்குகளை ஏற்றி வந்த லாரிகள் அடிக்கடி மாயமாகின. கடந்த 2008-ம் ஆண்டு அடுத்தடுத்து 13 லாரிகள் மாயமாயின. அவற்றின் ஓட்டுநர்கள், கிளீனர்கள் எங்கு சென்றனர், என்ன ஆனார்கள் என தெரியாமல் இருந்தது. லாரிகள் மாயமான விவகாரம் ஆந்திரா வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக லாரி உரிமையாளர் களும் காணாமல்போன ஓட்டுநர்கள், கிளீனர்களின் உறவினர்களும் கொடுத்த புகாரின் பேரில் ஓங்கோல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

அதைத் தொடர்ந்து 5 தனிப்படை கள் அமைத்து விசாரணை தீவிரப்படுத் தப்பட்டது. எந்த ஆதாரமும் இல்லாததால் ஓங்கோல் போலீஸாருக்கு இந்த வழக்கு பெரும் சவாலாக விளங்கியது.

இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த தாமோதர் என்ற பயிற்சி டிஎஸ்பி க்கு ஒரு சிறிய ஆதாரம் கிடைத்தது. மாயமான லாரியின் உதிரி பாகத்தை வைத்து விசாரணை நடத்தியதில், ஒரு கும்பல் சரக்கு லாரிகளை குறிவைத்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

ஓங்கோலைச் சேர்ந்த அப்துல் சமத் என்கிற முன்னா என்பவர்தான் கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளார். இவர், இரவு நேரங்களில், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகாரி போல் நடித்து, அவ்வழியே செல்லும் லாரிகளை தனது அடியாட்கள் மூலம் நிறுத்தி சோதனை செய்து ஆவணங்களை கேட்பாராம். ஆவணங்களை ஓட்டுநர்கள் எடுத்துவந்து கொடுக்கும்போது, அவர்களைத் தாக்கி, கழுத்தில் கயிற்றை இறுக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர், சரக்கு லாரியை கடத்தி ‘குக்கதோட்டா’ எனும் வனப்பகுதிக்கு ஓட்டிச் சென்று விடுவார். கொல்லப்பட்ட ஓ்்்ட்டுநரின் சடலத்தை வனப்பகுதியில் புதைத்து விடுவார்கள். லாரியில் இருக்கும் சரக்குகளை அங்கு வாடகைக்கு எடுத்து வைத்துள்ள பாழடைந்த கிடங்கில் இறக்கி வைத்துவிட்டு, லாரியை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து விற்று விடுவார்களாம்.

சில நாட்கள் கழித்து, கிடங்கில் உள்ள சரக்குகளை எடுத்துச் சென்று சந்தையில் விற்று விடுவார்கள். ஊரில் பெரிய மனிதர் போல காட்டிக் கொண்ட முன்னாவுக்கு அரசியல் பலமும் பெருகியது.

இதுமட்டுமின்றி, பணக்காரர்களை குறி வைத்து, அவர்களின் வீட்டில் தங்கப் புதையலை தோண்டி தருவதாக கூறி பல கொலைகளை முன்னா செய்துள்ளார் என்பதும் ஓங்கோல் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது..

பணக்காரர்களுடன் நட்பாக பழகி அவர்களை முதலில் நம்ப வைப்பார். பின்னர் அவர்களின் வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி, இரவு நேரத்தில் பூஜைகள் செய்வாராம். அப்போது அடி யாட்கள் மூலம் வீட்டில் இருப்பவர்களை கொலை செய்து, பணம், நகைகளை கொள்ளையடித்து் வந்துள்ளார்.

இந்த வழக்குகளில் கைது செய்யப் பட்ட முன்னா, பின்னர் ஜாமீனில் வெளியே வந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சென்று தலைமறைவாகி விட்டார். அந்த நேரத்தில்தான் சரக்கு லாரிகள் வழிப்பறி வழக்கில் ஓங்கோல் போலீஸார் பெங்க ளூரு சென்று முன்னாவை கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் 18 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

முன்னா மற்றும் அவரது கூட்டாளி கள் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் ஓங்கோல் நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு வந்தன. இதில் 3 வழக்குகளில் விசா ரணை முடிந்து, 8-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு அளிக்கப் பட்டது. வழிப்பறி, கொலை, கடத்தல் குற்றச்சாட்டுகளில் முன்னா உட்பட 12 பேருக்கு தூக்கு தண்டனையும் மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே 12 பேருக்கு ஒரே வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டுள்ளது என்பது இதுவே முதன் முறையாகும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x