Last Updated : 24 Dec, 2015 08:38 AM

 

Published : 24 Dec 2015 08:38 AM
Last Updated : 24 Dec 2015 08:38 AM

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு

அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை மேற் கொள்ள மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதிலும் 34 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சிலவற்றில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை, விண்ணப்பிப்பது முதல் சேர்க்கை வரை இணையதளம் மூலமாக நடைபெற்று வருகிறது. மற்ற பல் கலைக்கழகங்கள் பழைய முறை யிலேயே மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன. இதனால், வெளிப்படைத்தன்மை இல்லை என்பது உட்பட பல்வேறு புகார் கள் எழுகின்றன. இதை தடுக்கும் பொருட்டு உயர்நிலை கல்வியாளர் களுடன் மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகம் சமீபத்தில் ஆலோசனை நடத்தியது. இதில் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் அடுத்த கல்வி யாண்டு முதல் மாணவர் சேர்க் கையை இணையதளம் வழியாக மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை அமல்படுத்துமாறு பல் கலை மானியக் குழுவின் தலைவர் வேத்பிரகாஷுக்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்விப் பிரிவின் செயலாளர் வினய் ஷீல் ஓபராய் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

இக்கடிதத்தில், “வெளிப்படைத் தன்மை மற்றும் திறன்மேம்பாடு களை அதிகரிக்க இணையதளம் வழியாக மாணவர் சேர்க்கை நடத்து வது அவசியம். எங்கள் முடிவை அனைத்து மத்திய பல்கலைகழகங் களுக்கும் அனுப்பி அவர்கள் இணையதளம் மூலமாக நடத்தும் மாணவர்கள் சேர்க்கை குறித்த தகவலை சேகரித்து அனுப்பவும்” என்று ஓபராய் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்தக் கடிதத்தில் இணையதளம் மூலமாக மாணவர் சேர்க்கையை கட்டாயப்படுத்தும் வகையில் எதுவும் குறிப்பிடப்பட வில்லை. ஒருசில பல்கலைக் கழகங்கள் நிர்வாகப் பிரச்சினை காரணமாக இதை நடைமுறைப் படுத்துவதில் தாமதம் ஏற்படலாம் என கருதப்படுகிறது. இதை அமல் படுத்துவதில் எழும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் இதர பிரச்சினை கள் குறித்து உயர்நிலை கல்வி யாளர்களுடன் மீண்டும் ஆலோ சனை நடத்த மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆலோசனைக்குப் பிறகு இணையதளம் மூலமான மாணவர் கள் சேர்க்கையில் எழும் பிரச்சினை கள் முழுமையாக சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பல்கலைக்கழகங்களில் டெல்லி பல்கலைக்கழகம் முதல் முறையாக இணையதளம் மூல மாக மாணவர் சேர்க்கையை அறி முகப்படுத்தியது. இதில் கூடுதல் வசதியாக அசாம் பல்கலைக் கழகம், காத்திருப்புப் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு காலி யாகும் பாடப்பிரிவுகளில் தானாகவே இடம் ஒதுக்கப்படும் முறையை இணையதளத்தில் செயல்படுத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x