Last Updated : 26 Dec, 2015 09:53 AM

 

Published : 26 Dec 2015 09:53 AM
Last Updated : 26 Dec 2015 09:53 AM

குழந்தைகளுக்காக கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஆமிர் கான்: முகநூலில் புகைப்படங்கள் வெளியீடு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரபல இந்தி நடிகர் ஆமிர் கான் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து குழந்தைகளை குதூகலப்படுத்தி உள்ளார்.

தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரி வித்துக்கொண்டுள்ள ஆமிர் கான், தனது புகைப்படங்கள் சிலவற்றை யும் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்துள்ள கான், தனது மகன் ஆசாத் மற்றும் அவனது நண்பர் களுக்கு பரிசு வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

“கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, குழந்தைகளை மகிழ் விப்பதற்காக வீட்டிலேயே கிறிஸ்து மஸ் தாத்தா வேடமணிந்து புகைப் படம் எடுத்து அதை உங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளேன். அனை வருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து கள்” என முகநூல் பக்கத்தில் ஆமிர் கான் கூறியுள்ளார்.

ஆமிர் கான் அடுத்தபடியாக ‘தங்கல்’ திரைப்படத்தில் முன்னாள் மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் போகத் வேடத்தில் நடிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x