Last Updated : 25 Dec, 2015 11:13 AM

 

Published : 25 Dec 2015 11:13 AM
Last Updated : 25 Dec 2015 11:13 AM

தீவிரவாத சதிகளை முறியடிக்க உளவுத் தகவலை பயன்படுத்துங்கள்: அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுரை

நேபாளம், பூடான் எல்லைப் பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் சதித்திட்டங்களை முறியடிக்க உளவுத் தகவலை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று எல்லைக் காவல் படையினரை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

எல்லைக் காவல் படையின் (சஷாஸ்திர சீமா பால்) 52-வது ஆண்டு தினத்தையொட்டி டெல்லி யில் நேற்று நடந்த விழாவில் அவர் பேசியதாவது:

நேபாளம், பூடான் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் இந்திய எதிர்ப்பு சதித் திட்டங்களை நிறை வேற்றவோ அல்லது தீவிரவாதிகள் சேரவோ இடம்தரக்கூடாது. இதற்கு ஒற்றறியும் திறனை மேம்படுத்திட வேண்டும். உளவு தகவல் திரட்டும் முறைதான் பதற்றம் மிக்க இந்த எல்லைகளில் நமக்கு உள்ள மிக வலிமைமிக்க ஆயுதம். இந்திய விரோத நடவடிக்கைகள் நடப்பதை நீங்கள் தடுப்பீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஒற்றறியும் நடவடிக்கையை மேம் படுத்துவது அவசியம். இதற்கு உங்கள் அனுபவமும் திறனும் கைகொடுக்கும். இதன்மூலம் எதிர் காலத்தில் முக்கிய பங்கு அளிக்க முடியும். குற்றங்களைத் தடுத்திட உளவுத்தகவல் அவசியம்.

இந்த இரு எல்லையிலும் சமூக விரோதிகளும் தீவிரவாதிகளும் நடமாட அனுமதிக்கக்கூடாது. இதில் தனிப்பட்ட கவனம் தேவை. இவ் வாறு அவர் பேசினார். நேபாளம், பூடான் எல்லையை கண்காணிக் கும் பணியில் 2001-ல் எல்லைக் காவல் படை ஈடுபடுத்தப்பட்டது. மேலும் வெளிநாட்டு உளவுத் தகவல் திரட்டும் ரா அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x