Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

கரோனா நோயாளிகளுக்கு இலவசமாக தினமும் 1000 டன் ஆக்சிஜன் விநியோகிக்கும் ரிலையன்ஸ்

கோப்புப் படம்

புதுடெல்லி

கரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்து வரும் நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்துள்ளது.

வட மாநிலங்களில் உள்ளமருத்துவமனைகளில் தேவையான அளவில் ஆக்சிஜன் கையிருப்பு இல்லாத காரணத்தினால், நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனாநோயாளிகளுக்கு உதவிடும் நோக்கில் ரிலையன்ஸ் நிறுவனம்,குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள அதன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கி, ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக வழங்கி வருகிறது.

ஆரம்பத்தில் தினமும் 100 மெட்ரிக் டன் அளவில் திரவ ஆக்சிஜனை ரிலையன்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்தது. அதன்பிறகு உற்பத்தி அளவை 700 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது. இந்நிலையில் தற்போது நாளொன்றுக்கு 1000 மெட்ரிக் டன் அளவில்திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் வகையில் அதன் கட்டமைப்பை விரிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அளவில் மருத்துவ ஆக்சிஜனை ஒரே இடத்திலிருந்து அதிக அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனமாக ரிலையன்ஸ் திகழ்கிறது. ஆக்சிஜனுக்காக பரிதவித்து வரும் லட்சக்கணக்கான இந்தியர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவே ரிலையன்ஸ் நிறுவனம் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் 15,000 மெட்ரிக்டன் அளவில் மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜனை இலவசமாக வழங்கியுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x