Last Updated : 16 Dec, 2015 09:56 AM

 

Published : 16 Dec 2015 09:56 AM
Last Updated : 16 Dec 2015 09:56 AM

சிறுபான்மையினர் உரிமை தின கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்: கர்நாடக தமிழ் அமைப்புகளுக்கு மக்கள் கோரிக்கை

கர்நாடக அரசு சார்பாக நாளை மறுநாள் நடைபெறவுள்ள சிறுபான்மையின‌ர் உரிமை தின கூட்ட‌த்தில் மாநிலத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் பங்கேற்று, தமிழர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை எழுப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மத சிறுபான்மையினர் மற்றும் மொழி சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் வரும் வெள்ளிக் கிழமை சிறுபான்மையினர் உரிமை தினம் அனுசரிக்கப் படுகிறது. பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் கமருல் இஸ்லாம், சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பல்கீஸ் பானு, தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மையின அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்ற‌னர்.

ஆண்டு தோறும் நடைபெறும் இந்த கூட்டத்தில் கர்நாடகாவில் உள்ள கிறிஸ்தவம், இஸ்லாமியம், பௌத்தம், சீக்கியம் உள்ளிட்ட மத‌ அமைப்புகளின் பிரதிநிதி களின் அதிக அளவில் பங்கேற் பார்கள். இதே போல உருது, மராத்தி,தெலுங்கு, துளு ஆகிய மொழிகளை சேர்ந்த அமைப்பி னர் பங்கேற்று, தங்களது கோரிக்கைக்காக குரல் கொடுப் பார்கள். சிறுபான்மையின அமைப்புகளின் கோரிக்கைகளை பரிசீலித்து கர்நாடக அரசு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவிப்பு வெளியிடும்.

ஆனால் கர்நாடகாவில் உள்ள சிறுபான்மையினரில் குறிப்பிடத்தக்க அளவில் வாழும் தமிழர்களின் உரிமைக் குரல் இத்தகைய கூட்டங் களில் பெரும்பாலும் எதிரொலிப்பதில்லை. குறிப்பாக கர்நாடகாவில் உள்ள தமிழ் அமைப்புகளும், அதன் தலைவர்களும் ஆக்கப் பூர்வமான கோரிக்கைகளை கர்நாடக அரசிடம் தெரிவிப்பதில்லை.

எனவே இந்த ஆண்டு நடைபெறும் சிறுபான்மையின உரிமை தின கூட்டத்தில் கர்நாடகாவில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளின் பிரதிநிதி களும் தவறாமல் பங்கேற்க வேண்டும். அப்போது முதல்வர் சித்தராமையாவிடம் கர்நாடக தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வழங்கப்பட வேண்டிய உரிமைகள் குறித்து தெளிவாக அறிக்கை அளிக்க வேண்டும். குறிப்பாக தாய்மொழியில் கல்வி பயிலும் உரிமை, தாய்மொழி வழிபாட்டு உரிமை, தமிழாசிரியர்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும்.

மேலும் மொழி சிறுபான்மை யினருக்கு அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழர்களுக்கு மறுக்கப்படுகிறது. அதனை முறைப்படி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை தமிழ் அமைப்புகள் எழுப்ப வேண்டும்.

இந்த வாய்ப்பை தமிழ் அமைப்பினர் தவற விட்டால், எதிர்காலத்தில் கர்நாடகாவில் தமிழ் சந்ததியினர் பெரும் இன்னலை சந்திக்க நேரிடும் என அங்குள்ள தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பெங்களூருவில் வாழும் தமிழ் ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டுள்ள னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x