Last Updated : 27 Dec, 2015 11:06 AM

 

Published : 27 Dec 2015 11:06 AM
Last Updated : 27 Dec 2015 11:06 AM

பிரதமர் மோடியின் ஓராண்டு செல்வாக்கு

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த ஓராண்டை தொகுத்து பார்ப்போம்.

இந்தியாவின் மிக பிரபலமான, நம்பகத்தகுந்த தலைவர் என்ற அளவில் தன்னுடைய நிலையை 2015-ம் ஆண்டில் பிரதமர் மோடி உறுதிப்படுத்திக் கொண்டார். இந்திரா காந்தி காலத்தில் இருந்து, ஏன் நேரு காலத்தில் இருந்து கூட என்று சொல்லலாம். மோடிக்கு கிடைத்த பிரபலம், ‘மிகப்பெரிய மாற்றம்’ என்ற உறுதிமொழியை அளித்துதான் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார் மோடி. ஆனால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆமாம், சில மிகப்பெரிய ஊழல் கதைகள் வெளி யாகின. ஆனால், மன்மோகன் சிங் ஆட்சிக்கும் அவருக்கு முந்தைய தலைவர்களின் ஆட்சிக்கும் மோடியின் ஆட்சிக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

மோடி வெளியிட்ட பெரிய கொள்கைகள், பார்வையாளர் களை குழப்பம் அடையச் செய்தன. ஏற்கெனவே பல ஆண்டுகளாக இருக்கும் கழிவறை கட்டும் திட்டத்தின் மாற்று பெயர்தான் ‘சுவாச் பாரத்’தா? அப்படி என்றால் நல்ல விஷயம்தான். அதேநேரம் சுத்தப்படுத்துவதும், இந்தியர்களை சுகாதாரமாக வாழ ஊக்குவிப்பதும்தான் சுவாச் பாரத்தா? அப்படி என்றால், சமூக சீர்திருத்தங்களை செய்வது அரசு வேலையா?

குடும்ப கட்டுப்பாடு திட்டம், பெண் சிசு கொலைகளை தடுப்பது என பல திட்டங்கள் மூலம் அரசு சமூக சீர்த்திருத்தங்களை ஏற்கெனவே செய்து வருகிறதே என்று யாரும் விவாதம் நடத்தலாம். ஆனால், தூய்மைப்படுத்துவது என்பது அந்தளவுக்கு இல்லை.

மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு ஆட்சி காலத்தைவிட, இப்போது பொருளாதாரம் மிக மெதுவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியை, அரசின் வரவு செலவில் மோடி மிக அருமையாகப் பயன்படுத்திக் கொண்டார். மற்றபடி பொருளாதாரம் என்பது மந்தமாகத்தான் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், சீனாவின் பொருளாதார மந்த நிலை காரணமாகவே இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது எனலாம்.

தொழிற்துறையில், ‘மேக் இன் இந்தியா’ என்பது மோடியின் இன்னொரு மிகப்பெரிய கொள்கை. ஆனால், அந்தக் கொள்கை என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. சீனாவில் இருந்து அதிக உற்பத்தி நிலையை இந்தியாவுக்கு திருப்ப வேண்டும் என்ற யோசனையை ரிசர்வ் வங்கி கவர்னர் உட்பட நிபுணர்கள் நிராகரித்துள்ளனர்.

அதேசமயம் குஜராத்தில் உலகிலேயே மிகப்பெரிய அளவில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. அந்த சிலையை சீனா தயாரித்து தரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பான் கடன் வழங்க முன்வந்துள்ளது.

வெளியுறவு கொள்கையை பொறுத்தவரையில் மோடி 2 பெரிய விஷயங்களை செய்துள்ளார். வெளிநாடுகளின் நகரங்களில் வாழும் இந்தியர்களை மிக திறமையாக ஒன்றிணைத்துள்ளார். ஆனால், அவர்களை ஒரே இடத்தில் சந்திக்கச் செய்ததன் நோக்கம் தெளிவாக தெரியவில்லை. ஆனால், ஏதாவது ஒரு கதை சரியான நேரத்தில் வெளிவரும்.

அடுத்தது, பாகிஸ்தான் கொள்கை என்பது என்ன அல்லது அப்படி ஒரு கொள்கை இருக்கிறதா என்பதே தூதரக அதிகாரிகள் உட்பட யாருக்கும் தெரியாது. இந்த சூழ்நிலையில்தான் பாகிஸ் தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை என்ற செய்தி வருகிறது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி அளித்த உறுதிமொழிகளில் சில உண்மையில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது. உதாரணமாக, வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கருப்பு பணத்தை மீட்டு வருவேன், ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கேடயமாக இருக்க மாட்டேன் என்பதைக் கூறலாம்.

ஆட்சி எப்படி இருந்தாலும், மோடியைப் பொறுத்தவரை நம்பகத்தன்மை உடையவராக பிரபலமானவராக இருக்கிறார்.

இந்த செல்வாக்கு, புகழ், பிரபலத்தை பயன்படுத்தி பிஹார் தேர்தலில் மோடி கடுமையாக பிரச்சாரம் செய்தார். எனினும், பாஜக தோல்வி அடைந்தது. இந்த ஓராண்டில் காந்தி குடும்பமும் சரியாக செயல்படவில்லை. தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கான தெளிவான செயல் திட்டம் அவர்களிடம் இல்லை. அதற்கு பதிலாக நாடாளுமன் றத்தை செயல்பட விடாமல் முடக்கும் தந்திரத்தை கையாண் டனர். அதன்மூலம் அரசியலில் தங்கள் இருப்பை காட்டிக் கொண்டனர். தந்திரம் என்ற வகையில் இது சரியாக இருக்கும்.

பிஹார், குஜராத்தில் பாஜக.வுக்கு சற்று சரிவு காணப்பட்டாலும், இப்போதைக்கு மோடிதான் சிறந்த வராக விளங்குகிறார். காஷ்மீரில் பாஜக கூட்டணியில் உள்ள முப்தி முகமது சயீத் மிகவும் அனுபவ முள்ள அரசியல்வாதி. அவர் கூறும்போது, ‘மோடி இன்னும் 10 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்’ என்று கணித்திருக்கிறார்.

அப்படியானால், முதல் 18 மாதங்கள் முக்கியமில்லையா? கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா தேர்ந் தெடுக்கப்பட்டார். அப்போது அவரி டம் ரூபர்ட் முர்டோச் கூறும்போது, “உங்களுக்கு (ஒபாமா) முன்பு இருந்த அதிபர்கள், பதவிக்கு வந்த முதல் 6 மாதத்தில்தான் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளனர். அதன்பின்னர் நிர்வாக முறையில் அதிபர்கள் சிக்கி விட்டனர். அதன்பின் எந்த மாற்றத்தையும் அவர்களால் கொண்டுவர முடியவில்லை” என்று தெரிவித்தார்.

அப்படியானால் தன்னுடைய செல்வாக்கு, புகழ், பிரபலமானவர் என்ற முத்திரை, நம்பகத் தன்மை ஆகியவற்றை தக்க வைத்துக் கொள்ளவும் புதிய இந்தியாவின் வடிவத்தைக் கொண்டுவரவும் மோடி வேறு வழிகளைதான் கண்டுபிடிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x