Published : 15 Jun 2014 12:46 PM
Last Updated : 15 Jun 2014 12:46 PM

3 மாநில சட்டசபை தேர்தலுக்கு பாஜக வியூகம்- அமைப்புச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை

அடுத்து வர உள்ள 3 மாநில சட்ட சபை தேர்தல்களை சந்திப்பது குறித்து பாரதிய ஜனதா கட்சி வியூகம் அமைத்துள்ளது. இதுகுறித்து, டெல்லியில் நடைபெற்ற மாநில அமைப்பு செயலாளர்களின் இரண்டு நாள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஹரியாணா மற்றும் மகாராஷ் டிரா மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்தல் அக்டோபரில் நடைபெற உள்ளது.

இத்துடன் குடியரசு தலைவர் ஆட்சி நடந்து வரும் டெல்லி யிலிலும் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனி மெஜாரிட்டி கிடைத் ததைத் தொடர்ந்து, வரும் சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற பாஜக வியூகம் அமைத்து வருகி றது.

இதுகுறித்து ஆலோசிக்க டெல்லியின் அசோகா சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில அமைப்பு செயலாளர்களின் கூட்டம் நடந்தது.

இதுகுறித்து 'தி இந்து'விடம் பாஜகவின் தேசிய வட்டாரம் கூறுகையில்,

‘‘மக்களவைத் தேர்தலில் வீசிய மோடி அலையை ஓயவிடாமல், சட்டசபை தேர்தல்களிலும் அதன் பலனைப் பெற வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்சியின் கீழ்மட்டத்தி லிருந்து பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

மக்களவைத் தேர்தலைப் போலவே இதிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முழு மூச்சுடன் உதவும் எனவும், இதற்காக பாஜக தொண்டர்களின் உற்சா கம் குறையாமல் அதன் நிர்வாகி கள் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் ஆலோசனை அளிக்கப் பட்டதாகவும் அவர்கள் தெரிவித் தனர்.

இந்தக் கூட்டத்தில் பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் ராம்லால், ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் இணைச் செயலாளர் சுரேஷ் சோனி, இதன் தேசிய அமைப்பு இணைச் செயலாளர்களான சௌதான் சிங் மற்றும் வி.சதீஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகாராஷ்டிராவில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் காங்கிரஸுக்கு எதிராக கடுமையான அலை வீசுகிறது. இதன் விளைவாக, அங்கு சிவசேனா பாஜக கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 42 இடங்கள் கிடைத்தன.

காங்கிரஸ் ஆளும் ஹரியாணாவின் பத்தில், ஏழு தொகுதிகள் பாஜகவுக்கு கிடைத்தன. எனவே, இதேநிலை சட்டபை தேர்தல்களிலும் நீடிக்கும் என்றும், 3 மாநிலங்களிலும் ஆட்சி யைப் பிடிக்க முடியும் என்றும் பாஜக நம்புகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x